அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

வெடிக்கும் மாலத்தீவு பிரச்சனை.. கொந்தளித்த அக்‌ஷய் குமார்!

மாலத்தீவு பிரச்சனை சர்சசையை ஏற்படுத்தி வரும் நிலையில் மாலத்தீவுக்கு செல்வதை இந்தியர்களாகிய நாம் தவிர்க்க வேண்டும் என நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

தன்னடைய பயணத்தின் அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மோடி, லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன்.

லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும், வளர்வதற்குமான வாய்ப்பாக எனது லட்சத்தீவு பயணம் அமைந்தது. அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. லட்சத்தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் பதிவு இணையத்தில் வைரலாகி வந்தது. இதற்கு பலரும் லட்சத்தீவை மாலத்தீவுடன் ஒப்பிட்டு, மாலத்தீவை விட லட்சத்தீவு சிறந்தது என்று பதிவிட்டு வந்தனர். இதனை அடுத்து, மாலத்தீவு அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியர்களை கேலி செய்தும், தரக்குறைவான கருத்துகளை பகிர்ந்தனர். இதனால், இந்தியர்கள் மாலத்தீவுக்கு செல்வதை புறக்கணிக்க வேண்டும் என்று கூறினர். Boycott Maldives எனும் ஹேஷ்டேக்கையும் இணையத்தில் பதிவிட்டனர்.

இதனால் கொந்தளித்த திரை பிரபலங்கள் மோடிக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர். அந்த வகையில் நடிகர் அக்‌ஷய் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துக்களை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைப் பார்த்தேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டிற்கு இப்படி செய்வது ஆச்சரியமாக இருக்கிறது.

அண்டை வீட்டார்களிடம் நாம் நல்லவர்கள் தான், ஆனால் இத்தகைய தூண்டப்படாத வெறுப்பை நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும். நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். எப்போதும் அதைப் பாராட்டினேன், ஆனால் கண்ணியம் தான் முதன்மையானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்' என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையால் மாலத்தீவுக்கு டிக்கெட் புக் செய்த இந்திய மக்கள் பலரும்

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com