Omg 2
Omg 2

சிவன் அவதாரம் எடுத்த அக்‌ஷய் குமார்.. நாளை வெளியாகும் ஓ மை காட் 2 டீசர்!

Published on

அக்‌ஷய்குமாரின் ஓ மை காட் 2 படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அக்சய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் தான் ஓ மை காட். இதில் அக்‌ஷய் குமார் கடவுளாகவும், பரேஷ் ராவல் அவரால் உதவிபெறும் பக்தனாகவும் நடித்திருந்தனர். இந்த படத்தை உமேஷ் சுக்லா என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி தற்போது 10 ஆண்டுகள் கடந்துவுட்ட நிலையில் இதன் 2ஆம் பாகம் ஓ மை காட் 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் அமித்ராய் என்பவர் இயக்கியுள்ளார். அக்‌ஷய குமார் சிவபெருமானாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் அருண் கோவில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக படத்தின் க்ளிம்ஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிவன் கெட்டப்பில் இருந்த அக்‌ஷய்குமாரை கண்டு அவரது ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். ஹர ஹர மகா தேவ் என்ற வரிகளுடன் அக்‌ஷய்குமார் சிவபெருமானாக கம்பீரமாக நடந்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் படத்தின் கடவுள் கதாபாத்திரங்களை சரியாக காண்பிக்காததால் பல்வேறு கமெண்டுகள் வந்தது. தற்போது அக்‌ஷய்குமாரும் கடவுள் கெட்டப்பில் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுவரை வெளியான க்ளிம்ஸில் எதுவும் சர்ச்சை ஆகாமல் இருக்கும் நிலையில், நாளை வெளியாகவுள்ள டீசர் பொறுத்தே படம் மதிப்பீடு செய்யப்படும்.

logo
Kalki Online
kalkionline.com