கேன்ஸ் திரைப்பட விழாவில் வரலாற்று சாதனை படைத்த இந்தியத் திரைப்படம்!

Cannes festival
Cannes festival
Published on

கேன்ஸ் திரைப்பட விழாவில் வரலாற்று சாதனை படைத்த இந்திய திரைப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த மே 14-ம் தேதி முதல் நடைப்பெற்று வந்த கேன்ஸ் திரைப்படவிழா நேற்று நிறவடைந்தது. இந்திய குறும்படமான 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 40 வருடங்களுக்கு பிறகு கேன்ஸ் விழாவில் இடம் பெறும் இந்திய திரைப்படமாகும். பாயல் கபாடியாவின் இயகத்தில் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் இப்படம் உருவாகியுள்ளது.

விழாவில் இந்த ஆண்டு All we imagine as light, santosh, sunflowers, manthan, sister midnight too, retreat, the shameless ஆகிய 7 இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் இந்த படம் தான் தேர்வாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் “பாம் டி ஓர்” விருதுக்கு போட்டியிட்ட முதல் இந்தியத் திரைப்படமாகவும் இது அமைந்தது. படம் திரையிடப்பட்ட பின்னர் அங்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று 8 நிமிடங்கள் கைதட்டி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, படத்தின் இயக்குனர் பாயல் கபாடியா, நடிகைகள் சாயா கடம், திவ்ய பிரபா, கனி கஸ்ரதி ஆகியோர், கிராண்ட் பிரிக்ஸ் விருதை பெற்றுக்கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
ரெட்டை கதிரே... நடிகர் சூரி ட்வின்ஸா? அச்சு அசல் அவரை போலவே இருக்கும் சகோதரர்!
Cannes festival

விழாவின் முதன்மை போட்டி பிரிவில் கேன்ஸ் பாம் டி ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்திய திரைப்படம் என சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான 'கிரண்ட் பிரிக்ஸை' இந்திய திரைப்படமான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" வென்றுள்ளது. இதன் மூலம் 'கிராண்ட் பிரிக்ஸ்' வென்ற முதல் இந்திய இயக்குனராகி வரலாறு படைத்துள்ளார் பாயல் கபாடியா. பாம் டி'ஓர் விருதுக்கு அடுத்தபடியாக 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதுதான் கேன்ஸ் விழாவின் உயரிய விருதாகும்.இப்படத்திற்கு விழாவில் 8 நிமிடம் படம் பார்த்து முடித்த பின் எழந்து நின்று கை தட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com