அல்லு அர்ஜூனின் 'புஷ்பா 2' டீசர் ரெடி! ஏப்ரல் 8-ல் ரிலீஸ்!

Pushpa 2: The Rule
Pushpa 2: The Rule

அல்லு அர்ஜுன் தற்போது நடித்துள்ள ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைபடத்தின் டீசர் வரும் 8-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா தி ரைஸ்

நடிகர் அல்லு அர்ஜுன் டோலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவருடைய சிறந்த தரமான நடிப்பில் பிரபல இயக்குனரான  சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படமானது கடந்து 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தின் மூலமாக தான் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், புஷ்பராஜ் என்கிற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிக்காட்டி இருந்தார் நடிகர்  அல்லு அர்ஜுன். மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பகத் பாசில் வில்லனாக மிரட்டி இருந்தார். நடிகை சமந்தா ஆடிய  'ஊ சொல்றியா மாமா' ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

சுமார் 300 கோடி வசூல் சாதனை செய்த 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது பாகத்திலும் நடித்து முடித்துள்ளார் அல்லு அர்ஜுன்.

புஷ்பா தி ரூல்:

புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகமானது மிகப்பெரிய வெற்றியை எட்டிய நிலையில் அதன் இரண்டாவது பாகமானது அதிகளவிலான பொருட்செலவில் மிக பிரம்மாண்ட முறையில் தயாராகி வருவதாகவும் அதோடு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, அதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 'புஷ்பா தி ரூல்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அப்டேட் குறித்து, தொடர்ந்து அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது 'புஷ்பா 2' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 8-ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
Manjummel Boys நடிகரை கரம்பிடிக்கும் அபர்ணா தாஸ்!
Pushpa 2: The Rule

அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணி?

புஷ்பா திரைபடத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் அட்லியுடன் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக கூறப்பட்டுவருகிறது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி வரும் 8ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி டோலிவுட்டில் கொண்டாட்டம் தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com