ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் சமூக வலைதள பக்கத்தில் பதிலளித்து வருகிறார். இதில் ரசிகர் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு நான் விஜய் ரசிகர் சேதுபதியின் தீவிர ரசிகன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வியாழன் என்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்திருக்கிறது. மூன்று நாட்களில் 240.47 கோடி ரூபாய் உலகம் முழுவதும் திரைப்படம் வசூலித்திருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தி இருந்தது.
அதற்கு காரணம் நடிகர் ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா பிரியாமணி, யோகி பாபு என்ற முக்கிய நடிகர் படத்தில் நடித்திருப்பதும், மேலும் அட்லீ இயக்கமும், அனிருத் இசையும் படத்தினுடைய முக்கியத்துவத்தை தமிழ்நாட்டில் மேலும் அதிகரிக்க செய்தது.இந்த நிலையில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கக்கூடிய நிலையில் படத்தினுடைய கதாநாயகன் ஷாருக் கான் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் "நான் விஜய் சேதுபதியின் ரசிகன்" என்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு "நீங்கள் காளியுடன் ஒப்பந்தம் செய்திருக்கலாமே" என்றும் பதிவு செய்திருந்தார். அதற்கு நடிகர் ஷாருக்கான் பதிலளித்துள்ளார். அதில், "நானும் நடிகர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகன். ஆனால் நான் ஏற்கனவே காளியிடம் இருந்த கருப்பு பணத்தை எடுத்து விட்டேன். இதைத் தொடர்ந்து மற்றவர்களின் சுவிஸ் வங்கி கருப்பு பணத்தை எடுக்க போகிறேன். இதற்கான விசாவுக்காக காத்திருக்கிறேன். ஹா...ஹா.." என்று பதில் அளித்துள்ளார்.
விஜய் சேதுபதியை பாராட்டி உள்ள நடிகர் ஷாருக்கான் அதேசமயம் ஜவான் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பை மறைமுகமாக சொல்லி இருக்கிறாரோ என்று சினிமா விமர்சகர்கள் இந்த பதிவை குறிப்பிட்டு பேசி வருகின்றனர்.