காதலரை கரம்பிடித்தார் நடிகை அமலா பால்.. வைரலாகும் போட்டோஸ்!

நடிகை அமலா பால் - தேசாய்
நடிகை அமலா பால் - தேசாய்

மிழ் சினிமாவின் பிரபல நடிகையான அமலாபால் தனது நண்பரான ஜெகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

நடிகை அமலா பாலுக்கு கேரள மாநிலம், கொச்சியில் நேற்று (நவ. 5) திருமணம் நடைபெற்றது. நடிகை அமலா பால் தமிழில், மைனா, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது தோற்றத்தை முழுவதுமாக மாற்றி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவர் பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் சினிமாவில் நடித்து வந்த அமலா பால், விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் அக். 26-ம் தேதி அமலாபால் தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்று அவர் நண்பர் ஜெகத் தேசாய், காதலை வெளிப்படுத்தி அவருக்கு மோதிரம் அணிவித்த வீடியோவை பதிவிட்டிருந்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

தற்போது கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. இதன் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருவரும் திருமணமானதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com