'வாடிவாசல்' குறித்து இயக்குனர் அமீர் கொடுத்த ஷாக் அப்டேட்! படத்துக்கு என்ன ஆச்சு?

Vadivasal
Vadivasal

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

வெற்றி மாறன் இயக்கத்திலும், சூர்யாவின் நடிப்பிலும் உருவாகவிருந்த வாடிவாசல் திரைப்படம் குறித்து அமீர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாராகும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளன. முதல் பாகம் அநேகமாக செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை வைத்து கங்குவா ரிலீஸ் தேதியை முடிவு செய்யமுடியும் என படக்குழுவிடமிருந்து தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக ஒரு படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதன் பிறகு சூர்யாவின் திரைப்படங்கள் வேறெதுவும் வெளியாகவில்லை. எனவே ஒட்டுமொத்த சூர்யாவின் ரசிகர்களும் கங்குவா திரைப்படத்தை தான் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.

இதையடுத்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இதன் அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படம் எப்போது துவங்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது.

வாடிவாசல் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் நிலையில், கடந்த மாதம் கூட இயக்குனர் வெற்றி மாறன் விடுதலை படம் முடிந்த பிறகு வாடிவாசல் தான் என கூறி ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் அமீர், சில நாட்களுக்கு முன்பு தான் வெற்றிமாறனை சந்தித்ததாகவும், அப்போது அவர் விரைவில் வாடிவாசல் படத்தை துவங்க இருப்பதாகவும் சொன்னதாக தெரிவித்தார்.

அமீரின் இந்த வார்த்தையால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படம் துவங்க விருப்பது உறுதியானாலும், சூர்யா தான் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானால் தான் இந்த படம் குறித்த விவரம் தெரியவரும். சூர்யா பிஸியாக நடித்து வருவதால் ஏற்கனவே பாலாவின் வணங்கான் படத்தை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com