களைகட்டிய நிச்சயதார்த்தம்.. மகனுடன் பங்கேற்ற நடிகை எமிஜாக்சன்!

Amy Jackson engagement
Amy Jackson engagement

தன் மகன் முன்னிலையில், நடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.

ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் எமி ஜாக்சன். இவர் பிரபல மாடலும் ஆவார். தமிழில் இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்து இருந்தார். மேலும், இவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த 2.0 என்ற பிரம்மாண்ட படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து எமி ஜாக்சன் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து இருந்தார்.

இதையும் படியுங்கள்:
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ரோபோ ஷங்கர் மகள் திருமணம்... வைரலாகும் போட்டோஸ்!
Amy Jackson engagement

விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தது. ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி பின்னர் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்த பிறகும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இருவரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் தனது 4 வயது மகனுடன் எமி ஜாக்சன் பங்கேற்று நிச்சயதார்த்தத்தை முடித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com