கம்பீரக் குரலின் நாயகி ஆண்ட்ரியா இத்தனைப் படங்களில் நடித்துள்ளாரா?

Andrea movie list
Andrea movie list

நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா தனது நடிப்பாலும் குரலாலும் ரசிகர்களைத் திருப்தி படுத்த எப்போதும் தவறியதே இல்லை. இவரின் கவர்ச்சிகரமான குரலும் கம்பீரமான நடிப்பும் அவர் சினிமா துறையில் வெற்றிகரமாக வளம்வர காரணமாக அமைந்தது.

சென்னையில் உள்ள ஒரு ஆங்லோ இந்தியன் குடும்பத்தில் பிறந்த ஆண்ட்ரியா, 1985ம் ஆண்டு பிறந்தார். ஆண்ட்ரியா தனது பத்து வயதிலேயே 'Young Surdas' என்னும் இசைக் குழுவில் பாடி வந்தார். அதன்பின்னர் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதேபோல் 2005ம் ஆண்டு 'கண்ட நாள் முதல்' என்ற படத்தில் ஒரு கேமியோ ரோல் செய்யும் வாய்ப்பு ஆண்ட்ரியாவிற்கு கிடைத்தது. 2006ம் ஆண்டு வெளியான கௌதம் வாசுதேவ் மேனனின் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமாலினி முகர்ஜிக்கு பின்னணி குரல் கொடுத்தார், ஆண்ட்ரியா.  பின்னர் 2007ம் ஆண்டு முன்னணி நடிகர் சரத்குமாருடன் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்காக ஆண்ட்ரியாவிற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது பரிந்துரைக்கப்பட்டது.

அடுத்து 2010ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் லாவண்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.

அதன்பின்னர் அஜித்துடன் மங்காத்தா, கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, ராம் இயக்கத்தில் தரமணி எனத் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தார் ஆண்ட்ரியா. மேலும் துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை 3 போன்றப் படங்களில் நடித்த இவர் அந்த அனைத்து படங்களிலுமே சிறப்பான கதாப்பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தன் பெயரைப் பதித்தார்.

இதையும் படியுங்கள்:
OpenAI SORA: வந்துவிட்டது Sora AI. இனி கணப்பொழுதில் வீடியோ உருவாக்கலாம். 
Andrea movie list

குறிப்பாக வட சென்னை படத்தில் 'சந்திரா' என்ற கதாப்பாத்திரம் இன்றுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. ஹிந்தியில் விஸ்வரூப், விஸ்வரூப் 2 ஆகிய படங்களிலும் மலையாளத்தில் அன்னையும் ரோசலும், London bridge, Loham, தொப்பில் ஜொப்பன் ஆகிய படங்களிலும், தெலுங்கில் என்றென்றும் புன்னகை மற்றும் சைந்தவ் போன்ற படங்களிலும் நடித்தார்.

கா, நோ என்ட்ரி, பிசாசு 2 மற்றும் பாபி அந்தோனி இயக்கும் படத்திலும், தினேஷ் செல்வராஜ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா 2005ம் ஆண்டு வெளியான அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் மூலம் திரைத்துறையில் படகியாக அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் இதுவரை 20 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com