

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன், ஆகியோர் திருமணம் செய்ய உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவந்தன. அனிருத் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக 14 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்ததாக அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக இருக்கிறார்.
ரஜினி திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைக்கும் வாய்ப்பினை அனிருத் பெற்று வருகிறார். ரஜினியும் தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார் சன் பிக்சர்ஸ் மற்றும் சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனின் ஒரே மகள் தான் காவ்யா மாறன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது, இந்த திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.
கடந்த ஆண்டு அனிருத்தும் காவ்யாவும் காதலித்து வருவதாகவும் , விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் அப்போது அனிருத் தனது X தளத்தில் “திருமணமா? ஹாஹா... நண்பர்களே! அமைதியாக இருங்கள், தயவுசெய்து வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என்று எழுதினார்.
இந்நிலையில் , இந்த திருமணத்தை பற்றி அனிருத்தின் மாமாவும் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு மீடியாவிற்கு கொடுத்துள்ள நேர்காணங்களில் கூறிய விஷயங்களை அடுத்து , மீண்டும் மீடியாவில் அனிருத் காவ்யா திருமணம் பற்றிய செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளது.
பொதுவாக ஓய்.ஜி. மகேந்திரன் மீடியாவிற்கு அதிக அளவில் நேர்காணல் தர மாட்டார். மேலும் அவர் பரபரப்பிற்காக பேசும் நபரும் அல்ல என்பதால், அவரது நேர்காணலை பல மீடியாக்களும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நேர்காணலில் தனது மருமகனுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் "அனிருத்திற்கு மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்தத் தருணத்தில் அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவருக்கு ஒரு மிகப் பெரிய திருமணம் நடக்கவிருக்கிறது. எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, அது உறுதியாகிவிட்டது. அவர்களுக்குத் திருமணம் நடக்கப் போகிறது,” என்று மகேந்திரா கூறினார். வெளிப்படையாக அவர் காவ்யா பெயரைக் கூறாவிட்டாலும் கூட மறைமுகமாக கூறி இருந்தார்.
அந்தப் பெண் ஒரு சாதாரண பெண்ணல்ல , ஒரு ஐபிஎல் டீம் ஐ நிர்வகித்து வருபவர். அவரது தந்தையை போலவே வணிக திறமை கொண்டவர். அவர்கள் நல்ல ஜோடி, இருவரும் இணைந்து இசைத் தொழிலில் ஈடுபடலாம் என்று அவர் கூறியிருந்தார். ஐபிஎல் அணியை நிர்வகிக்கும் பெண்களின் காவ்யா மட்டுமே இளம் வயதினை கொண்டவர் , அவர் மட்டுமே இன்னும் திருமணம் ஆகாதவர். அதே போல அவரது தந்தையும் தொழிலதிபராக இருப்பது கலாநிதி மாறன் தான்.
நவம்பர் மாதம் ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொள்ளும் வகையில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் இது பற்றி அனிருத் மற்றும் காவ்யா தரப்பில் இருந்து அந்த அதிகாரப் பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.