ஆன்லைனில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆர்டர் செய்த அனிதா சம்பத்... அழுக்கு சேலையை கொடுத்த அமேசான்!

Anitha sampath
Anitha sampath

செய்தி வாசிப்பாளராக புகழ்பெற்ற அனிதா சம்பத் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஸ்டோரேஜ் பாக்ஸிற்கு பதிலாக அழுக்கு சேலை வந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே பரிட்சயம் ஆனவர் அனிதா சம்பத். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆன்லைன் மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆன்லைன் கலாச்சாரம் அதிகரித்த நிலையில், பலரும் ஆன்லைனில் தான் ட்ரெஸ் முதல் தேவையான பொருட்கள் வரை ஆர்டர் செய்து வருகின்றனர். வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து கொள்ளலாம் என்பதால், பலரும் இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறார்கள். குறிப்பிட்ட இந்த 2 ஆண்டுகளில் பெரிதளவு ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இதற்காக பல வெப்சைட்கள் இயங்கி வந்தாலும் பிளிப்கார்ட், அமோசான் ஆகிய இரண்டு தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் இணையவழி செயலியாக உள்ளன. பொதுவாகவே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் போது டெலிவரி சமயத்தில் நாம் ஆர்டர் செய்த பொருள் தான் வந்துள்ளதா என்பதை சரி பார்த்து வாங்க வேண்டியது அவசியம். அப்படி பலருக்கும் வேறு பொருட்கள் டெலிவரி செய்யப்படுவதும் வாடிக்கையாக தான் செய்கிறது. அந்த வகையில் அனிதா சம்பத்திற்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
லீக்கானது எஸ்கே 24 டைட்டில்.. ரசிகர்கள் உற்சாகம்!
Anitha sampath

இதை வீடியோவாக பதிவு செய்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், நான் ஸ்டோரேஜ் பாக்ஸ் வாங்க வேண்டும் என்று நினைத்து அமேசானில் ஆர்டர் போட்டேன். கடந்த ஜூன் 13ஆம் தேதி அது சம்பந்தமாக எனக்கு டெலிவரி வந்தது. 899 ரூபாய் பணம் கொடுத்து அந்த பொருளை வாங்கியிருந்த சமயத்தில், எனக்கு பல டெலிவரி வந்திருந்தது. நானும் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் டெலிவரி ஆனதை பிரித்து பார்க்கவில்லை. இன்று பிரித்து பார்க்கும் போது அழுக்கான, மிகுந்த துர்நாற்றத்தோடு ரேஷன் கடை புடவையை விட மோசமான நிலையில் ஒரு புடவை இருக்கிறது. ரிட்டன் செய்ய வேண்டிய நாள் முடிந்துவிட்டதால், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அமேசான் நிறுவனத்தில் இருந்து இதற்காக எனக்கு பதில் சொல்ல வேண்டும். இதற்கு நான் என்ன செய்யலாம் என்று தெரிந்தால் சொல்லுங்கள் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com