ஹாட்ஸ்டாரில் மாஸ் காட்டும் அண்ணாச்சியின் "லெஜெண்ட்" திரைப்படம்!

ஹாட்ஸ்டாரில்  மாஸ் காட்டும் அண்ணாச்சியின் "லெஜெண்ட்" திரைப்படம்!

ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தி லெஜெண்ட், ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளதாக அண்ணாச்சி ட்வீட் போட்டுள்ளார். புதிய அத்தியாயம் தொடக்கம் என்ற கேப்ஷனுடன் ட்வீட் செய்துள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் புகழ் அண்ணாச்சி தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தியேட்டரில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறாத இந்தப் படம் ஓடிடி ரிலீஸாக வெள்ளியன்று ஹாட் ஸ்டாரில் வெளியானது. ஹாட் ஸ்டாரில் தற்போது அண்ணாச்சியின் தி லெஜெண்ட் திரைப்படம் பட்டையை கிளப்பி வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

ஜேடி-ஜெர்ரி இயக்கிய 'தி லெஜண்ட்' திரைப்படம் கடந்தாண்டு ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'தி லெஜெண்ட்' திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. அண்ணாச்சி ஹீரோவாக நடித்த தி லெஜெண்ட் திரைப்படத்தை ஜேடி - ஜெர்ரி இருவரும் இயக்கியிருந்தனர். லெஜெண்ட் அண்ணாச்சியுடன் ஊர்வசி ரவுத்தேலா, பிரபு, விவேக், விஜயக்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஸ் இசையமைப்பில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்திருந்தது.படம் முழுக்க ரொமான்ஸ், செண்டிமெண்ட், சண்டை காட்சிகள் என கலவையாக இருக்க, இந்த படத்தில் நடித்திருந்த லெஜெண்ட் சரவணாவின் முயற்சிகளுக்கு சினிமா ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தி லெஜண்ட் திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.. பல மாதங்களாக ஓடிடியில் வெளியாகாமல் இருந்த இந்தப் படம், கடந்த 3ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ’தி லெஜெண்ட்’ மீண்டும் ஒவ்வொரு வீடுகளுக்குள் சென்று மக்கள் நெஞ்சங்களை குஷிப்படுத்த தொடங்கி உள்ளது என்கிறது இப்பட நிறுவனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com