அண்ணன் நான் தனியா வரவா... வெளியானது லியோ பாடல் ப்ரோமோ!

அண்ணன் நான் தனியா வரவா... வெளியானது லியோ பாடல் ப்ரோமோ!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நடிகர் விஜய்யின் லியோ படத்திலிருந்து நா ரெடி பாடலின் ப்ரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 22ஆம் தேதி லியோ படத்திலிருந்து நா ரெடி என்ற பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளார். இந்த நிலையில் இந்தப் பாடலின் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜிடம் விஜய் பிறந்த நாளில் லியோ அப்டேட்டை எதிர்பார்க்கலாமா என தொகுப்பாளர் கேட்க, 20 செகண்ட்ஸ்க்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக லோகேஷ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என பாடல் ப்ரோமோவை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார்.

லியோ படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com