பெண்ணியம் சார்ந்த திரைப்படங்கள் தமிழில் வருவது மிக குறைந்து வருகிறது. பாலசந்தர், பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் பெண்களின் சம கால பிரச்சனைகளை தங்கள் படங்களில் பேசி உள்ளார்கள்.
இது போன்று இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அறிமுக இயக்குனர் லயனோல் ஜோஷ்வா "அன்னபூரணி" என்ற படத்தில் சொல்லவருகிறார்.
பெண்கள் தங்கள் வீடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அகம் என்றும், வெளியில் சந்திக்கும் பிரச்சனைகளை புறம் என்றும் பிரித்து சொல்லியிருகிறார் டைரக்டர்.
அன்ன, மற்றும் பூரணி என்ற இரண்டு பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம் படத்தில் மிக சிறப்பாக நடித்த லிஜா மோல் இப்படத்தில் நடிக்கிறார். இவருடன் லாஸ்லியா, மெட்ராஸ் ஹரி கிருஷ்ணன் நடிக்கிறார்கள்.
அன்னபூரணி சஸ்பென்ஸ் திரில்லர் ட்ராமாவாக உருவாகி வருகிறது. பெண்களை கவர்ச்சியாக காட்டும் திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்று பெண்ணியம் சார்ந்த படங்கள் சற்று ஆறுதல் அளிக்கிறது.