
ஜிவி பிரகாஷை கதாநாயகனாக வைத்து தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்.
பாலிவுட் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் அனுராக் காஷ்யப். இவர் சமூக கருத்துக்களை பொது வெளியில் எழுப்பி அரசியலிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறார். மேலும் இவர் இயக்கிய கேங்க்ஸ் ஆப் வாசிபூர், தேவ் டி, பிளாக் ப்ரைடே ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை பாலிவுட் திரை உலகை ஏற்படுத்தியிருக்கிறார்.
தற்போது நடிகை சன்னி லியோனை வைத்து கென்னடி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த நிலையில் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் ஜிவி பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில் இயக்குனர் அனுராக் காஷ்யப் என்னை அவரது படத்தில் நடிக்க அழைத்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அனுராக் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்ற ஒப்பந்தமாகி உள்ளாராம். மேலும் படத்திற்கான படப்பிடிப்பையும் விரைவில் தொடங்க படக் குழு திட்டமிட்டு இருக்கிறது.
தற்போது இந்த படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பணி அனுராக் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இயக்குனர் அனுராக் காஷ்யப் நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ படத்திலும் சிறிய தோற்றத்தில் நடித்திருந்தார்.