விக்ரம் பிரபுவுடன் கைக்கோர்க்கும் அனுஷ்கா... கம்பேக்காக அமையுமா?

Anushka Shetty
Anushka Shetty

சமீபக்காலமாகத் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்தித்து வந்த அனுஷ்கா தற்போது விக்ரம் பிரபுவுடன் ஒரு படத்தில் கைக்கோர்க்கவுள்ளார். Ghaati என்றுப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் போஸ்டரை நேற்றுப் படக்குழு வெளியிட்டது.

2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சூப்பர்' என்றப் படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா ஷெட்டி 2009ம் ஆண்டு வெளியான 'அருந்ததி' படத்தின் மூலம் தென்னிந்திய மக்களின் கனவுக் கன்னியாக மாறினார். தனது ஆற்றல்மிக்க நடிப்பினால் சினிமாவில் பிற்பாடு நிரந்தர இடத்தைப் பிடித்தார்.

அவர் 2006ம் ஆண்டு 'ரெண்டு' என்றப் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிற்பாடு வேட்டைக்காரன், சிங்கம், தெய்வத்திருமகள், தாண்டவம் போன்றப் படங்களில் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் தனது இருப்பை நிரந்தரமாக்கினார், அனுஷ்கா.

அப்படியிருக்க, ஆர்யாவுடன் 'இஞ்சி இடுப்பழகி' என்றப் படத்தில் அனுஷ்கா கமிட் ஆனார். அந்தப் படத்திற்காக உடம்பை ஏற்றியப்பின்னர் அப்படியே அவருக்கு மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அந்தப் படத்திற்குப் பின்னர் பாகுபலி இரண்டாம் பாகம் மட்டுமே நன்றாக ஓடியது. அதிலும் அவர் தனிப்பட்ட அளவில் அவர் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை.

அதன்பின்னர் அவர் எவ்வளவுப் போராடினாலும் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சமீபத்தில் வெளியான Mr & Ms பாலிஷெட்டி படம் ஓரளவு வரவேற்பைபெற்றது. ஆனால் அனுஷ்காவின் பழைய நடிப்பு போலவும் கதைத் தேர்ந்தெடுப்புப் போலவும் இல்லை என்றே கூற வேண்டும். சமீபத்தில் கூட GOAT படத்தில் ஒரு பாடலில் ஆடித்தரும் படி முதலில் அனுஷ்காவிடம்தான் கேட்கப்பட்டது. ஆனால் ஆவர் 'நோ' சொன்ன நிலையில் அந்த இடத்தை திரிஷா பிடித்துவிட்டார்.

அந்தவகையில் அனுஷ்கா தற்போது கிரிஷ் ஜகர்லாமுடி இயக்கத்தில், காதி என்றப் படத்தில் நடிக்கவுள்ளார். இதன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் போஸ்டரில் அனுஷ்கா சேலையில் நடந்துப் போவது போன்ற புகைப்படம் இருந்தது. மேலும் இப்படத்தை யுவி கிரியேஷன் மற்றும் ஃபர்ஸ்ட் ஃப்ரேம் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்துத் தயாரிக்கவுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
உலகளவில் ட்ரெண்ட்டிங்கில் கலக்கும் 'கேப்டன் மில்லர்'... ரசிகர்கள் கொண்டாட்டம்!
Anushka Shetty

பாகுபலி படத்தை அடுத்து இந்தப் படத்தில் அனுஷ்காவும் ரம்யா கிருஷ்ணனும் சேர்ந்து நடிக்கவுள்ளனர். அதேபோல் விக்ரம் பிரபுவும் இந்தப் படத்தில் நட்பு ரீதியாக நடிக்கவுள்ளார் என்றச் செய்திகள் வந்தன. மேலும் இது ஒரு பெண்ணின் போராட்டக் கதை என்று கணிக்கப்படுகிறது.

ஒரு தனித்துவமான கதாப்பாத்திரமாக இருப்பதால் இப்படம் அனுஷ்காவின் கம்பேக்காக அமையும் என்றே ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால் படம் வெளியான பின்னரே அதனை உறுதி செய்யமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com