வளரும் AI டெக்னாலஜி.. மறைந்த பாடகர்களின் குரலுக்கு உயிர் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஏராளமான நன்மைகள் நடைகிறது. அதே சமயம் இதில் தீமைகளும் அடங்கியுள்ளது. சமீபத்தில் அடிக்கடி டீப் ஃபேக் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டு வருகிறோம். இந்த செயல் இந்த டெக்னாலஜி மூலமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் நிலை உருவாகும். என்னதான் அது மார்பிங் என்று சொன்னாலும் சமூகத்தில் ஒரு பெயர் கிடைத்தால் பெண்கள் அதிலிருந்து வெளிவருவது மிகவும் கடினமாகும்,

அதே சமயம் இதில் பல நன்மைகளும் உள்ளது. சமீபத்தில் ட்ரெண்டாகி வரும் அந்த அருவி போல் அன்ப தருவாளே பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி பாடியது போல் உருவாகி அசத்தியது ஏஐ தொழில்நுட்பம். அச்சு அசல் அவரது குரல் அதில் இடம்பெற்றிருந்தது.

இதே போன்று இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் மறைந்த நடிகர்களின் குரலை மீட்டு கொண்டு வந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் வெளியிடப்பட்டன. அப்போது லால் சலாம் படத்துக்காக AI தொழில்நுட்பத்தில் பாடல் ஒன்றை பதிவு செய்துள்ள ஏஆர் ரஹ்மான், மறைந்த இரண்டு பாடகர்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார்.

அதன்படி லால் சலாம் படத்தின் திமிறி எழுடா பாடலில், மறைந்த பின்னணிப் பாடகர்கள் சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரை பாட வைத்துள்ளார். AI டெக்னாலஜியை பயன்படுத்தி உயிருடன் இல்லாத இரண்டு பாடகர்களையும் பாட வைத்துள்ளது திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com