மழையால் கேன்சலானது ஏ.ஆர்.ரகுமான் கான்சர்ட்.. ரசிகரை டேக் செய்து ரகுமான் போட்ட ட்வீட்!

AR rahman
AR rahmanIntel

சென்னையில் பெய்து வரும் மழையால் ஏ.ஆர்.ரகுமானின் கான்சர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் 30 ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு சென்னையில் லைவ் கான்செர்ட் இன்று நடைபெற இருந்தது.

1992-ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் மூடி சூடா மன்னனாக இருந்து வந்த இளையராஜாவின் சிஷ்யனாக தனது பயணத்தைத் தொடங்கி பின் யார் சிறந்தவர் என்று ரசிகர்கள் மோதிக் கொள்ளும் அளவிற்கு மக்களை ஆக்கிரமித்தார் ரஹ்மான்.

தற்போது 2023-ஆம் ஆண்டில் திரையிசையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார் ரஹ்மான். இந்தி, தமிழ் , என கிட்டத்தட்ட 169 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் . ‘சின்ன சின்ன ஆசையில் 90-களின் குழந்தைகள் தொடங்கி ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என ஓங்கி ஒலித்து gen z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

AR rahman
AR rahmanIntel

இந்த நிலையில், ”மறக்குமா நெஞ்சம்” என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கான்செர்ட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ள இருந்தனர். ஆனால் மழை காரணமாக சென்னையில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதையறிந்த ரசிகர் ஒருவர் நல்ல வேல வேளச்சேரி தாண்டல, திரும்பி போயிடலாம் என பதிவிட்டுள்ளார். ரசிகரின் இந்த பதிவை டேக் செய்த ஏ.ஆர்.ரகுமான், அவரது ட்விட்டர் பக்கத்தில் லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆசை ஆசையாய் ஏ.ஆர்.ரகுமானின் இசை மழையில் நனைய தயாரக இருந்த ரசிகர்களை மழை பொழிந்து ஏமாற்றிவிட்டது. இருந்தாலும் ரசிகர்கள் கான்சர்ட் தேதி விரைவில் அறிவியுங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com