வீணாக வதந்திகளை பரப்பாதீங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்!

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்Intel

தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிலடி கொடுத்துவருகிறார்.

திரையிலகிலும், இசையுலகிலும் கொடிகட்டி பறக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

கடைசியாக பத்துதல, பொன்னியின் செல்வன், மாமன்னன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து ஹிட் அடித்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும், தனுஷ் இயக்கி நடிக்கும் டி50 படத்துக்கும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிக்கும் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது, இது தவிர மேலும் பட படங்களுக்கும் அவர் இசையமைக்கவுள்ளதாக அடுத்தடுத்த தகவல் வந்த வண்ணம் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக டாடா படத்துக்கு பிறகு கணேஷ் பாபு இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருப்பதாகவும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் பரவியது. இது தொடர்பான ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள ரஹ்மான், அதில் உண்மையில்லை. தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். திறமையான, வசீகரமான துருவிற்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள் என பதிலளித்தார்.

இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்று சிம்புவின் 48வது படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. அதனை தனது ட்விட்டரில் பகிர்ந்த ரஹ்மான், இந்தத் தகவல் தனக்கே தெரியாது என்பதுபோல கேள்விக்குறியை பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com