சாலைப் பொத்தலை சரி செய்த அர்னால்டு ஸ்வாஸ்நேகர் ட்விட்டரில் உலகுக்கு சொன்ன செய்தி!

சாலைப் பொத்தலை சரி செய்த அர்னால்டு ஸ்வாஸ்நேகர் ட்விட்டரில் உலகுக்கு சொன்ன செய்தி!
Published on

அமெரிக்காவில் தான் வசிக்கும் தெருவில் சாலையில் பெரிய பொத்தல் இருந்தது கண்டு அதைத் தன் குழுவினருடன் இணைந்து சரி செய்திருக்கிறார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர். அந்தச் சாலையில் இருந்த பொத்தல் சில வாரங்களாகவே அப்பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமத்தை அளித்து வந்தது. அதைச் சரி செய்ய புகார் அளித்த போதும் அதற்கு பதிலேதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இதற்கு மேலும் பொறுக்க வேண்டியதில்லை என்று முடிவெடுத்த அர்னால்டு தனது குழுவை அழைத்து, சாலைப் பொத்தலை சரி செய்யத் தேவையான சிமெண்ட், ஜல்லிக் கற்கள், இரும்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றுடன் சென்று அங்கு இறங்கினார்.

இறங்கியவர் உடனடியாக வேலையிலும் இறங்கி சாலை பொத்தலை அடைத்தார். தான் செய்த நற்காரியத்தை அவர் வீடியோ எடுக்கவும் தவறவில்லை. அந்த வீடியோவை ட்விட்டரில் பகிரவும் தவறவில்லை. பகிர்ந்தவர் அதில் உலகுக்கு ஒரு சேதியும் சொல்லி இருக்கிறார்.

“Today, after the whole neighborhood has been upset about this giant pothole that’s been screwing up cars and bicycles for weeks, I went out with my team and fixed it. I always say, let’s not complain, let’s do something about it. Here you go”.

சில வாரங்களாக எனது அண்டை அயலாருக்கு மிகப்பெரிய தொல்லை கொடுத்து வந்த அந்தப் பெரிய சாலைப் பொத்தலை ஒருவழியாக நானும் எனது குழுவினரும் சென்று அடைத்து விட்டோம். நான் எப்போதும் சொல்வதைப் போல நாம் புகார் சொல்வதைக் காட்டிலும், அதைத் தீர்ப்பதற்காக ஏதேனும் செய்வோம். Here you go! என்று பதிவிட்டிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com