அருள்நிதியின் டிமான்ட்டி காலனி பாகம் 2!

 டிமான்ட்டி காலனி
டிமான்ட்டி காலனி

அருள்நிதியின் கேரியரில் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகிய படம் என்றால் அது டிமான்ட்டி காலனி தான். இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்த டிமான்ட்டி காலனிதிரைப்படம் 2015ம் ஆண்டு வெளியாகி வெற்றி படமாகியது.

அஜய் ஞானமுத்துவின் முதல் படமான இப்படம், ஹாரர் திரில்லர் ஜானரில் ரசிகர்களை மிரட்டும் விதமாக உருவாகியிருந்தது. பாசிட்டிவான விமர்சனங்களுடன் சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்தில் அஜய் ஞான முத்துவின் மேக்கிங் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டது.

Arul nithi
Arul nithi

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவான இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வரவிருக்கிறது.

டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை மிரட்டலான போஸ்டருடன் அறிவித்துள்ள படக்குழு, மேலும், ஒரு முக்கியமான அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் அருள் நிதியுடன் பிரியா பவானி சங்கர் நடிக்கும் டிமான்ட்டி காலனி 2ம் பாகத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான செய்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com