"திரும்ப வந்துட்டேனு சொல்லு" சிக்ஸ் பேக்குடன் ஆர்யா வெளியிட்ட புகைப்படம்... கொண்டாடும் ரசிகர்கள்!

Arya
Arya

முன்னணி நடிகரான ஆர்யா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் சார்பட்டா பரம்பரை. துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்யாவுக்கு அவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இந்த படத்தின் 2ஆம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட இவர் இந்த படத்திற்காக தயாராகி வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

தற்போது, இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் 'Mr.X'. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். இதில், நடிகர்கள் சரத்குமார், கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு திபு நின்னன் தாமஸ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இன்று தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் தனது புதிய 'Mr X ' திரைப்படத்திற்க்கான அவரது உடலமைப்பு தொடர்பான புகைப்படங்கள் பகிர்ந்து உள்ளார். அதில், எனது 'Mr.X' புதிய படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த படத்தை சகோதரர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப்படத்ஹ்தை தயாரிக்கிறது. 'Mr.X' படத்திற்கு, மார்ச் 2023 - ல் ஸ்கிரிப்ட் தயாரானது. புதிய உடல் தோற்ற பொலிவுக்கான வேலை ஏப்ரல் 2023-ல் தொடங்கியது. அதன் பின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கியது.

இதையும் படியுங்கள்:
விஜய்யை சூழ்ந்த கேரளா ரசிகர்கள்... சுக்குநூறாக நொறுங்கிய கார்!
Arya

இறுதியாக, நாங்கள் படத்தின் கடைசி ஷெட்யூலில் இருக்கிறோம். இலக்கை நோக்கி தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கிறோம். தற்போது ஒரு வருடம் ஆகிவிட்டது. தற்போது மார்ச் 2024-ல் இருக்கிறேன். எனது உடல்வாகு தொடர்பான புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன்.இந்த படம் அதிரடி காட்சி நிறைந்த படம் என குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com