ப்ளூ ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தை அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கி உள்ளார். மேலும் இப்படத்திற்கு தமிழ் பிரபா திரைக்கதை வசனம் அமைத்துள்ளார். அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ப்ளூ ஸ்டார் என்ற கிரிக்கெட் குழுவின் கேப்டன் (அசோக் செல்வன் ) தான் ஒரு விளிம்பு நிலை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பல்வேறு அவமானங்களையும், பிரச்சனை களையும் சந்திக்கிறார். குறிப்பாக ஆல்பா என்ற ஆதிக்க ஜாதி கிரிக்கெட் குழு கேப்டனால் (சாந்தனு) அதிகம் அவமானப்படுத்தப்படுகிறார். இந்த இருவரையும், திருத்தணியில் உள்ள ஒரு பணக்கார கிரிக்கெட் கிளப் உள்ளே விட அனுமதி மறுக்கிறது. ப்ளூ ஸ்டார், ஆல்பா இந்த இருவரும் இணைந்து இந்த பணக்கார கிளப்புடன் மோதுவதுதான் ப்ளூ ஸ்டார் கதை.
அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் ப்ளூ ஸ்டார் படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று பெருமளவு பேசப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காலு மேல கால போடு ராவண குலமே பாடல் பெரும் புரட்சியை கிளப்பியுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்தப் படம் ரூ. 80 லட்சம் வசூலை முதல் நாள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் கண்டிப்பாக இனிவரும் நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.