"மாஞ்சா நீ" அயலான் 4வது பாடல் ரிலீஸ்.. டான்ஸ் ஆடி வைப் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Ayalaan - Maanja Nee  Song
Ayalaan - Maanja Nee Song

யலான் படத்தின் 4வது பாடல் வெளியாகி யூடியூப்பில் டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 12ம் தேதி ரிலீசாகிறது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மண்டாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல பிரச்சனைகளை தாண்டி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது. ஏலியன்ஸை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை காண ஏராளமானோர் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் 4வது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாஞ்சா நீ என்ற இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களின் ஹைப்பை அதிகரித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும், சிவகார்த்திகேயனும் சேர்ந்து எழுதியுள்ளனர். அதேபோல், இப்பாடலை ஏஆர் ரஹ்மானுடன் அவரது மகன் ஏஆர் அமீன் இணைந்து பாடியுள்ளார்.

வெஸ்ட்டர்ன் ஸ்டைலில் உருவாகியுள்ள அயலானின் மாஞ்சா நீ பாடலுக்கு சாண்டி மாஸ்டர் கோரியோகிராப் செய்துள்ளார். முக்கியமாக இப்பாடலில் சிவகார்த்திகேயனுடன் குட்டீஸ்கள் இணைந்து ஆடியுள்ளனர். அவர்களுடன் சர்ப்ரைஸ்ஸாக ஏஆர் ரஹ்மானும் செம்ம ஃபன்னாக டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ஜிகு ஜிகு ரயில் பாடலில் ஏஆர் ரஹ்மான் டான்ஸ் ஆடி மாஸ் காட்டியிருந்தார். அதன்பின்னர் இப்போது அயலான் படத்தில் டான்ஸ் ஆடியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com