அயலான்
அயலான்

அயலான் விமர்சனம்!

இந்த அயலானை குடும்பத்துடன் ரசிக்கலாம்(3 / 5)

'ET உட்பட சில ஹாலிவுட் படங்கள்,தமிழிலும், பிற மொழிகளிலும் வந்த சில பல நாவல்களின் தழுவல்களை மைய்யமாக வைத்து வந்துள்ளது அயலான். 

’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் R.ரவிக்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.வில்லனிடம் இருக்கும் ஒரு பொருளை கைப்பற்ற வேற்று கிரகத்தில் இருக்கும் ஒரு உயிரினம் (அயலான் ) பூமிக்கு அதுவும் சென்னைக்கு வருகிறது. நம்ம ஹீரோஇதற்கு அடைக்கலம் தந்து உதவுகிறார். வில்லன்  அயலானை கடத்தி டார்ஜர் செய்கிறார்.நம்ம ஹீரோ அயலானை வழக்கம் போல்  காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

விவசாயம், பூமி பாதுகாப்பு போன்ற விஷயங்களை ஹீரோ தான் வழக்கம் போல் பேசுவார். இந்த படத்தில் அதனை வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஏலியன் பேசுகிறது. பல படங்களில் வரும் கார்பரேட் வில்லன்,  சேசிங், பிரம்மண்டமான லேப் என பல படங்களில் பார்த்த அம்சங்கள் ரீப்பீடு என சொல்ல வைக்கின்றன. ரிவால் வர் ரீட்டா பாணியில் எப்போதும் வில்லனுடன் ஒரு பெண் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

நம்ம ஊருக்கு வந்தா ஏலியன் காதலுக்கு உதவ வேண்டுமே என்ற எழுதப்படாத திரைக்கதை உள்ளது போலும், அயலான் படத்திலும் ஹீரோ -ஹீரோயின் காதலுக்கு உதவுகிறது. படத்தில் பல விஷயங்கள் ரீபீட் மோடில் இருந்தாலும் இரண்டாவது பாதியில் கதை நகரும் விதம் ரசிக்கும் படியாக இருக்கிறது.

முத்துராஜின் கலை இயக்கமும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் சேர்ந்து பல லாஜிக் மீறல்களை மறக்க செய்கின்றன. சித்தார்த்தின் குரலில் ஏலியன்  நன்றாக நடித்துள்ளது. ரஹ்மான் இசையில் பாடல்களை விட உணர்ச்சி பூர்வமான இடங்களில் மட்டும் சிறப்பிக்கிறார்.   

ஒரு சிறிய இடைவெளிக்கு பின்பு சிவகார்த்திகேயன் ஒரு சரியான படத்தில் நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்பதை புரிந்து நடித்திருக்கிறார். ராகுல் ப்ரீதி சிங் வந்து போகிறார்.

இதையும் படியுங்கள்:
மேரி கிறிஸ்துமஸ் விமர்சனம்!
அயலான்

மூன்று காமெடியன்கள் இருந்தும் சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார்கள் படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ஆபாசம், வன்முறை எதுவும் இல்லாமல் ஜனரஞ்சகமான படமாக வந்துள்ளது அயலான். ரவிகுமார் தந்துள்ள இந்த அயலானை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com