அயலான் படைத்த சாதனை.. கொண்டாடும் படக்குழு!

Ayalaan
Ayalaan

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் R.ரவிக்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். வில்லனிடம் இருக்கும் ஒரு பொருளை கைப்பற்ற வேற்று கிரகத்தில் இருக்கும் ஒரு உயிரினம் (அயலான் ) பூமிக்கு அதுவும் சென்னைக்கு வருகிறது. ஹீரோ இதற்கு அடைக்கலம் தந்து உதவுகிறார். வில்லன் அயலானை கடத்தி டார்ஜர் செய்கிறார். ஹீரோ அயலானை வழக்கம் போல் காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

#Ayalaan Director R.Ravikumar
#Ayalaan Director R.Ravikumar

விவசாயம், பூமி பாதுகாப்பு போன்ற விஷயங்களை ஹீரோ தான் வழக்கம் போல் பேசுவார். இந்த படத்தில் அதனை வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஏலியன் பேசுகிறது. சையின்ஸ் பிக்சனாக உருவாகியுள்ள இந்த படம் ஃபேமில் எண்டெர்டெயின்மெண்டாக அமைந்துள்ளது. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படத்தை சன் என் எக்ஸ்ட் ஒடிடி நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.

ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் இதுவரை ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com