அயலான் இரண்டாம் பாகம் இயக்குனர் பேச்சு!

அயலான்
அயலான்
Updated on

யலான் திரைப்படத்தின் வெற்றியை கொண்டு இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படமாகவும் இது உள்ளது. இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது அயலான்.

இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்க கூடிய நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்து இருப்பது. தமிழில் பிரம்மாண்டமாக ஏலியனை பற்றி உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இது நகைச்சுவை, ஆக்சன், சயின்ஸ் என்று பல்வேறு விதமான கதை கருக்கலை கொண்டு இருக்கும். மக்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

மேலும் அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை முன் கூட்டியே நடிகர் சிவகார்த்திகேயனிடம் தெரிவித்துவிட்டேன். அவருக்கும் கதை பிடித்திருக்கிறது. இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. பொங்கலுக்கு வெளியாக உள்ள அயலான் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டு இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகும். அதே சமயம் இரண்டாம் பாகத்தை உருவாக்க தற்போது செலவானதை விட 4 மடங்கு கூடுதலான பணம் செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com