பபூன்- திரை விமர்சனம்

அகதிகளின் வலி
Vaibhav
Vaibhav
Published on

-ராகவ் குமார்.  

அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ், அனகா, ஆடுகளம் நரேன் நடித்துள்ள படம் பபூன். முதலமைச்சருக்கும், கட்சியின் மூத்த அரசியல்வாதிக்கும் ஈகோ பிரச்சனை வருகிறது.

அரசியல்வாதிக்கு பாடம் புகட்ட நினைக்கும் முதல்வர் அரசியல்வாதி செய்யும் நிழல் உலக போதைமருந்துகள்  கடத்தல் காவல் துறை மூலமாக  தொழில்களில் கை வைக்கிறார்.இவர்களின் ஈகோவில் அப்பாவி இளைஞன் டிரைவர்  குமரன் (வைபவ் )சிக்கிக் கொள்கிறான்.

போதை பொருள் கடத்தல் தலைவன் தனபால் என்பவன் குமரன்தான் என பொய்யாக புனைகிறது  காவல் துறை. இவர்களிடம் இருந்து தப்பித்து, காதலி உதவியுடன் இலங்கை செல்ல முயல்கிறான். இதிலும் தோற்று போகிறான். உண்மையான தானபால் யார்? குமரன் தப்பித் தானா? என பல சுவாரஸ்யமான முடிச்சுகளை நேர்த்தியான திரைக்கதையில் அவிழ்க்கிறார் டைரக்டர்.

படத்தின் ஹீரோ வைபவ்வாக இருந்தாலும், இவரை விட மற்றவர்கள் சிறப்பாக நடித்து உள்ளனர். மாவட்ட எஸ்பி யாக வரும் தமிழரசன் ஓரளவு நிஜ போலீஸ் அதிகாரியை கண் முன் நிறுத்துக்கிறார். வைபவ் நண்பராக வரும் அந்தகுடி இளையராஜாவின் உடல் மொழியும், குரல் வளமும் மிக சிறப்பாக உள்ளது.

Baboon
Baboon

தமிழ் சினிமாவின் அடுத்த நகைச்சுவை நடிகர் ரெடி. வாத்தியாராக வரும் கஜாராஜ் நிஜ கூத்துகலைஞனை நினைவுபடுத்துகிறார். அனகா இலங்கை பெண்ணாக நடித்து, வித்தியாசமான நடிப்பை தந்திருகிறார். தந்தையின் நாடக தொழிலை வெறுத்து அயல் நாடு போக ஆசைப்படும் போது வைபவ் சமகால இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார்.. 

 ராமநாதபுர மாவட்ட  கடலின் பிரம்மாண்டதையும், அழகையும் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா ஒளிப்பதிவு கருவி அழகியலுடன் காட்டுகிறது. கடல் வழியாக தப்பித்து செல்ல நினைக்கும் அகதிகளின் பிரச்சனைகளை வலியும், வேதனையாக பதிவு செய்து இருக்கிறார் டைரக்டர்.

சந்தோஷ் நாராயணன் இசை இதற்கு உதவி செய்கிறது. குறைந்த நேரத்தில் ஒரு பரபரப்பான படத்தை தந்த தயரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ்க்கும் டைரக்டர்க்கும் ஒரு சலுயூட்  பபூன் -சாதாரண மக்களான நாமதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com