மிரள்
மிரள்

பரத்தின் மிரளவைக்கும் 'மிரள்'!

Published on

"மிரள்" இந்த திரைப்படத்தை எம். சக்திவேல் இயக்கியுள்ளார். இதில் பரத் இதில் கதாநாயகனாகவும், வாணி போஜன் கதாநாயகியாகவும் மற்றும் மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

கோலிவுட்டில் த்ரில்லர்கள் தான் இந்த சீசனின் சுவை எனத் தோன்றினாலும், தனது படம் வித்தியாசமாக இருக்கும் என்று சக்திவேல் கூறியிருந்தார். தற்போது படத்தின் தலைப்பை வெளியிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

நெல் வயல்கள், மலைகள் என இந்த திரைப்படம் டீசர் ஆரம்பிக்கிறது. இந்த படத்தின் முழு கதையும் ஒரு காற்றாலை பண்ணையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதையில் பரத் என்ஜினீயராக நடிக்க, வாணி போஜன் அவரது மனைவியாக நடிக்கிறார்.

பரத் - வாணி போஜன்
பரத் - வாணி போஜன்

இந்த படத்தில் நகரில் இருக்கும் கதாநாயகன் பரத்தும் அவர் குடும்பமும் நெடுநாள் கழித்து கிராமத்திற்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் திகில் தான் இத்திரை படத்தின் கதையாகும் .

இந்த திகில் திரைப்படம் நவம்பர் 11, 2022 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த திரைப்படம் சுமார் 1.21 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் பார்வையாளர்களை மிரள வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com