பிக்பாஸில் பேசப்பட்ட கமல் ஆடை.. வடிவமைப்பாளர் யார் தெரியுமா?

Kamalhasan
Kamalhasan

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. தமிழிலும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸில் இதுவரை 6 சீசன்கள் முடிந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 7சது சீசன்கள் தொடங்கியது. எந்த சீசனிலும் இல்லாத அளவான ரசிகர்கள் இந்த சீசனுக்கு கிடைத்தனர். இதில் பைனல்ஸுக்கு சென்ற டாப் 5 போட்டியாளர்களில் அர்ச்சனா வின்னராகவும், மணி ரன்னராகவும் அறிவிக்கப்பட்டார்.

இதில் வின்னராக அறிவிக்கப்பட்ட அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம், ஒரு வீடு, ஒரு கார் என அனைத்தும் பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து சீசன்களிலும் பல விஷயங்கள் ட்ரெண்டாகியும், பேசும்பொருளாகியும் இருந்தது. இந்த சீசனில் இணையத்தில் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று கமல்ஹாசனின் ஆடை. அதுவும் குறிப்பாக அந்த சர்வாணி ஆடை மிகவும் பிரபலமாகி வைரல் கண்டெண்ட் ஆனது.

இந்த நிலையில், கமல்ஹாசனின் ஆடை வடிவமைப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் அணிந்திருந்த உடையின் வடிவமைப்பாளர், பிரபல உடைவடிவமைப்பாளர் அமிர்தா ராம் என்று தெரியவந்துள்ளது. இவர் உடைவடிவமைப்பாளர் மட்டும் இல்லாமல், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் தொழில் நிறுவனராகவும் இருந்து வருகிறார்.

kamalhasan
kamalhasan

இவர் கமல்ஹாசன் மட்டுமல்லாமல் பல திரையுலக பிரபலங்களுக்கும் உடை வடிவமைப்பாளராக பணியாறியுள்ளார். மேலும், அவரின் படைப்புகளை இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டு வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com