பிக்பாஸில் தோற்ற புல்லி கேங்.. கொண்டாட்டத்தில் விஷ்ணு செய்த செயல்!

விஷ்ணு
விஷ்ணு

பிக்பாஸில் அர்ச்சனா வெற்றி பெற்றதற்கும், புல்லி கேங் தோற்றதற்கும் சேர்த்து விஷ்ணு வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தார்.

பிக்பாஸ் 6 சீசன்கள் முடிந்த நிலையில், 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி கடந்த வார ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதிக வாக்குகளோடு இந்த சீசனில் அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து ரன்னராக மணி அறிவிக்கப்பட்டார். வெற்றி பெற்ற அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சமும், ஒரு வீடும், ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டது.

இதனால் புல்லி கேங் கடுப்பாகினர். பலரும் மாயா வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் 2வது ரன்னராக அறிவிக்கப்பட்டு வெளியேறினார். இந்த சீசனில் மாயா கேங்கிற்கு அதிக எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில், சக போட்டியாளர்களும் இரு துருவமாகவே விளையாடி வந்தனர்.

அப்போது விஷ்ணு, நம்முள் ஒருவர் ஜெயித்தால் 10000 வாலா வெடி வெடித்து கொண்டாடுவேன். மாயா டீமில் இருந்து யாரும் ஜெயிக்கக்கூடாது. எப்படி ஜெயிக்கிறார்கள் என பார்க்கிறேன் என தெரிவித்திருப்பார். இந்த நிலையில் இந்த சீசனில் அர்ச்சனா வெற்றி பெற்றதை தொடர்ந்து, விஷ்ணு வீதியில் சரவெடி வெடித்து கொண்டாடினார். இதனால் விஷ்ணு ரசிகர்கள் சொன்னதை செய்தார் விஷ்ணு விஜய் என கூறி வீடியோ பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com