நாடு படத்தில் நாயகனாக நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன்!

 தர்ஷன்
தர்ஷன்

லைவாழ் மக்கள் கதாபாத்திரத்தில் உண்மை சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிக் பாஸ் தர்ஷன்.

இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் பிரபலம் அடைந்தவர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு விளம்பரங்களுக்கு மாடலாகவும் நடித்துள்ளார். இவர் மிஸ்டர் ஸ்ரீலங்கன் பட்டத்தையும் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கூகுள் கிட்டப்பா படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் சரவணனின் படத்தில் கதாநாயகனாக தர்ஷன் நடித்துள்ளார். இப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் படத்தை ஸ்ரீ ஆர்ச் மீடியா நிறுவனத்தின் சார்பில் சக்கரா மற்றும் ராஜ் தயாரிக்கின்றனர். படத்திற்கு சக்தி ஒளி பதிவு செய்கிறார். இப்படத்திற்கு நாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாடு படம் குறித்து இயக்குனர் சரவணன் தெரிவித்து இருப்பது, நாடு திரைப்படம் மலைவாழ் மக்களினுடைய வாழ்க்கையையும், வலிகளையும் எடுத்துரைக்கும் ஆவணமாக இருக்கும். இது உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது‌. முழுக்க முழுக்க கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும், அடிப்படைத் தேவைகளை பெறுவதற்கும் எத்தனை சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை இந்த படத்தின் மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் மலைவாழ் மக்களுடைய வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கும். படத்திற்கான ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கவனமாக தேர்வு செய்து இருக்கிறோம் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com