
கடந்தாண்டு ஒளிபரப்பான தமிழ் 'பிக்பாஸ் சீசன் 6' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் மணிகண்டன். அதுமட்டுமல்லாமல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என அறியப்படும் இவர், தற்போது 'மை டியர் டயானா' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனையும் கமல் தொகுத்து வழங்கிவரும் நிலையில், இதுவரை தமிழில் 6 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்தவகையில் 21 போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் மணிகண்டன். இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் ஆவார்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது, திறமையாக விளையாடி, 84 நாட்கள் வரை இருந்தபின்னரே எவிக்ட் செய்யப்பட்டார். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்டார்.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனான மணிகண்டன் தற்போது ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
'மை டியர் டயானா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், வெப் சீரிஸாக உருவாகிறது. அதற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதில்தான் மணிகண்டன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த பட பூஜையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.