விஜய் படத்தில் நடிக்கப்போகும் பிக்பாஸ் ஷிவின்!

விஜய் படத்தில் நடிக்கப்போகும் பிக்பாஸ் ஷிவின்!

Published on

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி முடிந்தது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை வாரம் இரு நாள் தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன். இந்த விளையாட்டில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 106 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி மூன்று இடங்களில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இருந்தனர். இப்போட்டியின் இறுதியில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இறுதி நாள் வரை இந்தப் போட்டியில் இருந்த திருநங்கையான ஷிவின் மூன்றாமிடம் பெற்றார். இந்தப் போட்டியில் ஷிவினே வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. இந்த நிலையில் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கப்போகும், ‘விஜய் 67’ படத்தில் ஷிவின் நடிக்க உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி, விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், ‘பாரதி கண்ணம்மா’ தொடரிலும் ஷிவின் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ‘விஜய் 67’ படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com