பிக்பாஸ் விஷ்ணுவுக்கு அடித்த ஜாக்பாட்... சினிமாவில் ஹீரோ வாய்ப்பு!

Bigg boss vishnu
Bigg boss vishnu

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தார்கள் என்றே சொல்லலாம். அதுவும் குறிப்பாக பிக்பாஸ் 7வது சீசனுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருந்தார்கள். காரணம் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது தான். எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக இந்த சீசனில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது.

அப்படி இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர் தான் விஷ்ணு. ஏற்கனவே சீரியல்களின் நடித்து பிரபலமான விஷ்ணு, தனி ஸ்ட்ராடர்ஜியை பயன்படுத்தி விளையாடிய விளையாட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. கடைசி வரை நின்று களமாடிய போட்டியாளர்களுள் இவரும் ஒருவர். டாப் 5 போட்டியாளராக இருந்த இவர், 4ஆம் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
புதுப்படங்கள் வெளியான முதல் 2 நாட்களுக்கு விமர்சனம் செய்யக்கூடாது – கேரளா உயர்நீதிமன்றம்!
Bigg boss vishnu

இந்த நிலையில், விஷ்ணுவுக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலால் விஷ்ணுவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com