

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மீண்டும் அறிமுகமாகியதோடு மட்டுமல்லாமல் காழ் என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் பிக் பாஸ் சீசனில் கலந்துக்கொண்ட யுகேந்திரன்.
நடிகர் விஜயின் மிக நெருங்கிய நண்பரும், மலேசியா வாசுதேவனின் மகனுமான பாடகர் யுகேந்திரன் தமிழில் பல்வேறு படங்களில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் உடன் இணைந்து பூவெல்லாம் உன் வாசம், யூத், பகவதி, மதுர, திருப்பாச்சி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். இந்த நிலையில் சமீப காலமாக படத்தில் நடிப்பதை தவிர்த்து இருந்தார். தற்போது நடைபெற்ற ஒரு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமீபத்தில் வெளியேறி இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் யுகேந்திரன் காழ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத்தை வி. ஜே மோகன்ராஜ் இயக்கி தயாரித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து செல்வ கதிரேசன், கிரிஷிக்கா ஆகியோரும் தயாரித்திருக்கின்றனர். வெளிநாட்டில் குடியேறும் குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது.
மேலும் படம் முழுவதும் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சித்தார்த் அன்பரசு, நித்யா பாலசுப்பிரமணியன், மிமிலீயோனார்ட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கே.எஸ். ஹெல்வீன் மற்றும் சஞ்சய் அரங்கில் ஆகியோர் இசை அமைத்திருக்கின்றனர். இது யுகேந்திரனுக்கு ரீ என்ட்ரியானாலும், மாஸ் என்ட்ரி என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.