Ajay Devgn's singham again
Ajay Devgn's singham again

படப்பிடிப்பில் காயமடைந்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்!

Published on

சிங்கம் அகைன் படப்பிடிப்பில் காயமடைந்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு உடனடியாக படப்பிடிப்புக்கு திரும்பினார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தமிழில் வெளியான சிங்கம் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ரோஹித் ஷெட்டி பாலிவுட்டில் சிங்கம் படத்தின் ரீமிக்கை அஜய் தேவ்கான் நாயகனாக வைத்து எடுத்தார். சிங்கம் ரீமேக்யின் முதல் பாகம் பாலிவுட்டிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து. தற்போது மூன்றாவது பாகம் தயாராகி வருகிறது.

இப்படத்திற்கு இயக்குனர் ரோஹித் ஷெட்டி சிங்கம் அகைன் என்று பெயரிட்டு இருக்கிறார். மூன்றாம் பக்கத்திலும் அஜய் தேவ்கான் கதாநாயகன் நடித்து வருகிறார். மேலும் அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நாவல் எழுத்தாளராக மாறிய பாலிவுட் நடிகை ஷுமா குரேஷி!
Ajay Devgn's singham again

இந்த நிலையில் சண்டைக் காட்சிக்கான படபிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அஜய் தேவ்கான் கண்ணில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கு மருத்துவர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு பரிசோதித்துள்ளனர். அதே நேரம் மற்றொருபுறம் இயக்குனர் ரோஹித் ஷெட்டி மற்ற சண்டை கலைஞர்களை வைத்து மற்ற காட்சிகளை தொடர்ச்சியாக எடுத்து இருக்கிறார். சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய அஜய் தேவ்கான், சண்டைக்காட்சி முழுவதையும் அன்றைய தினமே நடித்து முடித்துள்ளார். ஹீரோ ஒருவர் காயம்பட்டு சிறிது நேரத்திலேயே படப்பிடிப்புக்கு திரும்பியது பாலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com