பாலிவுட் பூமராங்!

கேரவன் செலவு கண்ணைக் கட்டுதே!
பாலிவுட் பூமராங்!

மும்பை பரபர!

பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அம்பானி குடும்பங்க ளுக்குக் கேரவன் பணியாற்றும் கேதன் ராவல், கேரவன்கள் அமைப்பதில் வல்லவர்.

தற்போது, பாலிவுட் முன்னணி நடிகையும், இயக்குனரும், தயாரிப்பாளருமான கங்கனா ரணவத், அவர் படப்பிடிப்புக்குச் செல்ல பயன்படுத்தும் கேரவனை தனது ரசனைக்கு ஏற்றவாறு, கேதன் ராவல் மேற்பார்வையில் உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றியிருக்கிறார். இதற்கான செலவு 65 லட்சமெனக் கூறப்படுகிறது. அட மாற்றி அமைப்பதற்கு ஆன செலவு மட்டும் 65 லட்சம என்றால், கேரவனின் மொத்த மதிப்பு எத்தனையோ கோடி இருக்குமே!

இதுபற்றி கேதன் ராவல் கூறுகையில், “தன் சொந்த வீட்டிலிருப்பது போலவே, கேரவனிலும் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டுமென கங்கனா ரனவத் விரும்பியதால், அவரது உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஒரிஜினல் மரத்தில் இருக்கைகள், டேபிள்கள் தயாரித்து உள்ளோம்” என்கிறார்.

ஆடம்பரமான கேரவன்களை, பாலிவுட்டிலிருக்கும் பல பிரபலங்கள் சொந்தமாக வைத்திருக்கின்றனர். ஒரு சிலரின் கேரவன்களின் மதிப்பைப் பார்க்கலாமா?

ஷாருக்கானின் கேரவன் ` 5 கோடி.

சல்மான்கானின் கேரவன் ` 4 கோடி.

ஹ்ரித்திக் ரோஷன் கேரவன் ` 3  கோடி.

(அடேங்கப்பா! கேரவன் செலவு கண்ணைக் கட்டுதே!)

நிச்சயதார்த்தம் Vs பிரிவு!

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், பிரபலமான ஃபேஷன் டிசைனர் நந்திதா மதானி என்பவரை காதலித்து இரு வருடங்களுக்கு முன்பு எளிமையான முறையில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். ஆக்ராவில் தாஜ்மஹால் முன்பு அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ வெளியாகி வைரலான நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

வித்யுத் ஜம்வால், தமிழில் ‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த பிறகு அஜித்குமாருடன் ‘பில்லா 2’, சூர்யாவுடன் ‘அஞ்சான்’ ஆகிய படங்களில் நடித்தவர்.

சில தினங்களுக்கு முன்பு, பாலிவுட் பிரபலம் ஒருவரது வீட்டுத் திருமண நிகழ்வில், வித்யுத்தும், நந்திதாவும் தனித்தனியா கலந்துகொண்டதொடு பேசிக்கொள்ளவும் இல்லை. அவர்களுடைய திருமணம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் விராட்கோலி உட்பட பலரிடம் பணியாற்றும் நந்திதா மதானி ஏற்கனவே ஒரு தொழிலதிபரை காதல் திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தவராம்!

(“எதற்கும் வேளை வர வேண்டும் போல!”)

“டாப்ஸியின் கோபம்!”

மிழ் சினிமாவிலிருந்து இந்திக்குச் சென்ற டாப்ஸி அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்சமயம் ஷாருக்கான் ஜோடியாக ‘டன்கி’ இந்திப் படத்தில் நடித்து வருகிறார். தனது டயட்டீஷியனுக்கு, ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக சமீபத்தில் இவர் கூறியுள்ளதற்கு, நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் போட்டிருந்தனர்.

‘எனது உடல்வாகு ஏற்ற – இறக்கமின்றி ஒரே மாதிரியாக இருப்பது கண்டு பலரும் வியக்கிறார்கள். அதற்குக் காரணம் முறையான  டயட்டில் நான் இருப்பதுதான். என்னைச் சரியான டயட்டில் வைத்து, நல்ல ஆலோசனைகளைத் தரும் டயட்டீஷியனுக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளமாகக் கொடுப்பதில் என்ன தப்பு? வயது ஆக-ஆக உடல்நிலை ஒரே மாதிரி இருக்காது. அந்தச் சமயத்தில் மருத்துவமனைகளுக்கு பல லட்சம் செலவிடுவதைவிட இப்போதே டயட்டீஷியனை ஏற்பாடு செய்து உடல்நிலை பாதுகாப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது?

எனது அப்பாவுக்கு இது குறித்துத் தெரிந்தால் கோபப்படுவார். அவர் கோபப்படுவதிலும், என்னை விமரிசப்பதிலும் அர்த்தம் இருக்கிறது. மற்றவர்கள் ஏன் இது பற்றி கவலைப்படுகிறார்கள்?” என்பதாகும்.

(“ஏதோ ஒரு அக்கறைதான்!”)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com