பாலிவுட் ஹீரோ டோலிவுட் வில்லன்!

பாலிவுட் பூமராங்!
பாலிவுட் ஹீரோ டோலிவுட் வில்லன்!

தென்னிந்திய சினிமாவில் ஒரு விஷயம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டால், அது அநேகமாக டோலிவுட்டில்தான் இருந்திருக்கும் என்பது உண்மைதான். எதனால்? பெரிய பட்ஜெட், புதிய கேமராக்கள், விஎப்எக்ஸ் என பிரமாண்டமாக டோலிவுட் சினிமா உள்ளது. பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய சினிமாவிற்குள் ஒரு நடிகை நுழைகிறார் என்றால் அதன் ஆரம்பம் பெரும்பாலும் தெலுங்கு சினிமாவாகத்தான் இருக்கும். இப்போதெல்லாம் பாலிவுட் ஹீரோக்களை வில்லன்களாக மாற்றி அழகு பார்த்து வருகிறது டோலிவுட். ஒரு படம் வருகையிலேயே, வில்லன் எந்த பாலிவுட் நடிகர் என எதிர்பார்ப்பு வர ஆரம்பித்துவிட்டது.

வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் பாலிவுட் ஹீரோக்கள் யார்...? யார்...?

பாபி தியோல்

ந்தியில் ஹீரோவாக பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். இப்போது தெலுங்கில், இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் ‘ஹரிஹர வீர மல்லு’ என்கிற பீரியட் ஆக் ஷன் படத்தில் ஒளரங்கசீப் வேடத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் ‘கங்குவா’வில் இவர்தான் வில்லன் எனக் கூறப்படுகிறது.

நவாஸுதின் சித்திக்

னது சின்ன சின்ன முகபாவனைகள், உடல்மொழி ஆகியவைகளால் அந்தக் கதாபாத்திரத்தை இயல்பாக்கி நடிப்பதில் வல்லவர். ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் ‘சைந்தவ் படத்தின் மூலம் டோலிவுட்டில் தடம் பதிக்க உள்ளார். இந்தப் படம் இவரின் 75ஆவது படமென்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் தத்

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானது KGF அதீராவாகத்தான். ‘லியோ’வில் ஆண்டனிதாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்சமயம் டோலிவுட்டின் ‘டபுள் ஐ ஸ்மார்ட்’ (2ஆம் பாகம்) படத்தில் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக நடிக்க உள்ளார். ஆக் ஷன் படங்களுக்குப் பெயர்போன புரி ஜெகன்நாத் இயக்கத்தில் சஞ்சய் தத், வில்லனாக நடிப்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

அர்ஜுன் ராம்பால்

பாலிவுட்டின் சாக்லேட் பாய்களில் முக்கியமானவர். ரொமான்டிக், ஆக் ஷன் என பாலிவுட்டில் தூள் கிளப்பும் இவர், டோலிவுட்டில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பகவந்த் கேசரி’ படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக நடித்து முடித்துள்ளார். சூப்பர் எண்ட்ரி.

சயீஃப் அலிகான்

பேன் இந்தியா’ படமென்றால் சயீஃப் அலிகான் நிச்சயமாக நடித்திருப்பார். ‘ஆதி புருஷ்’ படம்கூட ராமனாக பிரபாஸ், ராவணனாக சயீஃப் அலிகான் என்கிற தகவலுடன்தான் வெளியானது. தற்சமயம், கொரடாலா சிவா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் டோலிவுட் படமான ‘தேவாரா’வில் ஜுனியர் NTRக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

“ரே... சம்ப்பேஸ்தானுரா’ என பஞ்ச் டயலாக்குகளும், பனை மரங்கள் பற்றி யெரிவது போன்ற காட்சிகளும் கொண்ட டோலிவுட், பாலிவுட்டை இழுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com