பம்பர் விமர்சனம்: மத நல்லிணக்கத்தின் ஒரு நம்பிக்கை ஒளி!

பம்பர் விமர்சனம்: மத நல்லிணக்கத்தின் ஒரு நம்பிக்கை ஒளி!
Published on

சாதியை மைய்யமாக வைத்து படம் வந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படமாக வந்துள்ளது பம்பர்.

வெற்றி, ஷிவாணி, ஹரிஷ் பரேடி நடித்துள்ள இப்படத்தை செல்வகுமார் இயக்கி உள்ளார். தமிழ் நாட்டில்  லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. கேரளா அரசு லாட்டரி விற்பனை செய்கிறது. தூத்துக்குடியில் எந்த பொறுப்பும் இல்லாமல் சுற்றும் இளைஞன் ஒருவன் சபரிமலைக்கு மாலை போட்டு செல்கிறான். திரும்பி வரும் வழியில் பம்பையில் ஒரு பம்பர் லாட்டரி வாங்குகிறான். அதன் தொடர்ச்சியாக நடக்கும் பல்வேறு விஷயங்கள் தான் பம்பரின் கதை.

லாட்டரி என்ற ஒரு நூலில் மத ஒற்றுமை, அன்பு, குடும்பம், கேரளா, தமிழ் நாடு மக்களின் பேராசை என பல்வேறு விஷயங்களை அழகாக கோர்த்து தந்துள்ளார் டைரக்டர். மத நல்லிணக்கம் என்ற கருத்தை ஒரு அறிவுரையாகவோ, பிரசாரமாகவோ இல்லாமல் ஒரு வாழ்வியலாக இந்த படத்தில் சொல்லப்படிருக்கிறது. ஐயப்ப கோவில் வாசலில் பசியால் இருக்கும் இஸ்லாமிய பெரியவரை கோவிலுக்குள் அழைத்து சென்று உணவளிப்பது, கோவிலுக்கு வெளியே தொழுகை செய்யும் இஸ்லாமியர் மீது வெயில் படாமல் இருக்க ஒரு அட்டையை வைத்து மறைக்கும் இந்து என மானிடத்தை போற்றும் காட்சிகள் படத்தில் உள்ளன.

வினோத் ரத்னாசாமியின் ஒளிப்பதிவில் தூத்துக்குடியும், கேரளாவும் யதார்த்த அழகில் உள்ளது. மு. காசி விஸ்வநாதனின் எடிட்டிங் ஒரு நல்ல கதை சொல்லியை போல பயன்பட்டிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் ஐயப்பன் பாடல் சிறப்பாக உள்ளது.நாம் வில்லனாக பார்த்த 'சேட்டா 'ஹரிஷ் பரேடி ஒரு இஸ்லாமிய பெரியவராக  வாழ்ந்து காட்டியுள்ளார். வறுமையிலும் நேர்மை என்பதை கண் முன் கொண்டு வந்து விடுகிறார்.. நடிப்பில் மறைந்த நடிகர் திலகனை நினைவு படுத்துகிறார் நம் சேட்டா. வெற்றி இதற்கு முன்பு சில படங்கள் நடித்திருந்தாலும் இந்த படத்தில் தான் நன்றாக நடித்துளார் என்றே சொல்லலாம்.

ஊரில் ஒரு வீம்பு கார இளைஞனாக சுற்றும் போதும், கிளைமாக்ஸ் காட்சிகளில் அன்பால் கட்டு ப்படும் போதும் நல்லதொரு நடிப்பை தந்துள்ளார். ஷிவாணி. முறைபெண்ணாக வந்து போகிறார். கொஞ்சம் நடிக்க முயற்சி செய்துள்ளார். கேரளாவில் இஸ்லாமிய குடும்பத்தினராக வருபவர்களின் நடிப்பும் சிறப்பாகவே உள்ளது.இந்து, முஸ்லீம், தமிழ் நாடு, கேரளா என்பதெல்லாம் மனிதன் விதித்த எல்லைகளே.மானிடம்தான் இங்கு முக்கியம் என்று அழுத்தமாக சொல்லும் படமாக வந்துளது பம்பர்.  எளிய மனிதர்களை கதை மாந்தர்களாக வைத்து ஒரு நேர்த்தியான படம் தந்ததற்கு செல்வகுமாரை பாராட்டலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com