நாளை மாலை வரப்போகுது கேப்டன் மில்லர் ட்ரைலர்.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

கேப்டன் மில்லர் படம்
கேப்டன் மில்லர் படம்

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படம் தான் கேப்டன் மில்லர். இந்த படத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். பல சர்ச்சைகளை தாண்டி உருவாகும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் முன்னோட்ட விழா நடைபெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இது திரைப்படம் 1930 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் நாயகனாக தனுஷ் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com