வாழ்க்கையை கொண்டாடுவதுதான் வெற்றி : ரசிகருக்கு ஷாருக்கான் பதில்!

Shahrukhan
Shahrukhan

மூக வலைதளத்தில் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு வாழ்க்கையை கொண்டாடுவது தான் வெற்றி என்று ஷாருக்கான் பதில்.

இந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். 1965 நவம்பர் 2 டெல்லியில் பிறந்து சாருக் கான் 1992 ஆம் ஆண்டு தீவானா திரைப்படத்தின் மூலம் இந்தி திரை உலகிற்கு அறிமுகம் ஆகிறார். அதே ஆண்டில் நான்கு வெற்றி படங்களை கொடுத்து பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக கால் பதிக்கிறார். தற்போது வெளியான ஜவான் திரைப்படம் வரை பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அன்று இந்தி ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

மேலும் ஷாருக்கான் நடிப்பில் தற்போது வெளியான பதான் மற்றும் ஜவான் திரைப்படங்களே இந்த ஆண்டில் இந்தியாவில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படங்களில் முதன்மையானவையாக இருக்கின்றன. மேலும் இந்தியாவில் பான் ஸ்டார், வசூல் ஸ்டார் என்று ஷாருக்கான் அழைக்கப்படுகிறார். அதோடு ஷாருக்கான் தமிழில் ஹேராம் தொடங்கி சென்னை எக்ஸ்பிரஸ் வரை பல்வேறு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இப்படி திரைத்துறை, தயாரிப்பு பணி, தொழில் நிறுவனங்கள் என்று பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக வளம் வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதை தனது முக்கிய செயல்பாடாக கொண்டிருக்கிறார் ஷாருக்கான்.

இந்த நிலையில் ஷாருக்கானிடம் ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் "உங்களைப் பொறுத்தவரை வெற்றி என்பது என்ன ?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நடிகர் ஷாருக்கான் "வெற்றி என்பது வாழ்க்கையின் மிகச்சிறிய, எளிமையான விஷயங்களை ரசிப்பது தான்‌. வாழ்க்கையை கொண்டாடுவதே வெற்றி." என்று பதில் அளித்துள்ளார்.

ஷாருக்கானின் இந்த பதில் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com