சந்திரமுகி 2
சந்திரமுகி 2Vijay Kumar

மீண்டும் வந்தாள் சந்திரமுகி.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரைலர்..!

Published on

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் சந்திரமுகி 2 படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அவ்வபோது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சந்திரமுகி படத்தை பார்க்க ரசிகர்கள் இன்றும் ஆர்வமாக உள்ளனர். ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என டாப் நடிகர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து நடித்து பட்டைய கிளப்பியிருப்பார்கள். இப்படம் 200 நாட்களுக்கும் மேல் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது. இந்த படத்தின் 2ஆம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுவந்தனர்.

இவர்களின் ஆசைக்கேற்ப இயக்குனர் பி.வாசு 2ஆம் பாகம் எடுக்க முடிவெடுத்தார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. அதற்குப் பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

அதனை தொடந்து கடந்த மே மாதம் முதல் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான இறுதி கட்டப் படப்படிப்பை தொடங்கினர் படக்குழு. அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இவர்களை தவிர லட்சுமிமேனன் கங்கனா ரனவத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் செப்டம்பர் 19 தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் சந்திரமுகியின் பழைய வாழ்க்கை மட்டும் வேட்டையன்ராஜாவின் பழைய வாழ்க்கை காண்பிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் படத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com