"எவரதி" வடிவேலுவின் சந்திரமுகி 2 டப்பிங் காட்சி வெளியீடு!

வடிவேலு
வடிவேலு

சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் டப்பிங் பணிகளை நகைச்சுவையாக எடிட் செய்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு, வினித் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் 200 நாட்களுக்கும் மேல் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது. இந்நிலையில் லைகா பதயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 19 தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் வடிவேலு பேசிய இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படத்தில், நடிகர் வடிவேலு அச்சப்படும் இக்காட்சி காண்போரை பரிதாபத்தோடு சிரிக்க வைத்தது. வடிவேலுவின் முருகேசன் கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றது. இந்நிலையில், லாரன்ஸ் நடிப்பில் உருவாக்கப்படும் இத்திரைப்படத்தின் 2 ஆம் பாகத்திலும், சந்திரமுகியின் பெஸ்ட் ஃபிரண்டாக நடிகர் வடிவேலு நடித்துள்ளார். இதற்கான டப்பிங் பணியின் போதே, வடிவேலுவை சந்திரமுகி அலற வைக்க தொடங்கியது.

எத்தகைய அச்சமூட்டினாலும், தானே சந்திரமுகியின் பெஸ்ட் ப்ரண்ட் என்று நடிகர் வடிவேல் தனக்கே உரிய முக பாவனையுடன் தெரிவித்துள்ளார். மாமன்னன் படத்தில் முற்றிலும் வேறு வடிவேலுவை பார்த்த ரசிகர்கள், சந்திரமுகி 2 ஆம் பாகத்தின் மூலம் காமடி நாயகனை காண உள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com