தயாராக இருங்க.. 17 வருடம் கழித்து மீண்டு வரும் சந்திரமுகி 2.. அசத்தலான க்ளிம்ஸ்!

சந்திரமுகி 2
சந்திரமுகி 2

ந்திரமுகி 2 படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் சந்திரமுகிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து தான் வருகிறார்கள்.

அவ்வபோது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சந்திரமுகி படத்தை பார்க்க ரசிகர்கள் இன்றும் ஆர்வமாக உள்ளனர். ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என டாப் நடிகர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து நடித்து பட்டைய கிளப்பியிருப்பார்கள். இந்த படத்தின் 2ஆம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுவந்தனர்.

இவர்களின் ஆசைக்கேற்ப இயக்குனர் பி.வாசு 2ஆம் பாகம் எடுக்க முடிவெடுத்தார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. அதற்குப் பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

அதனை தொடந்து கடந்த மே மாதம் முதல் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான இறுதி கட்டப்பட படிப்பை தொடங்கினர் படக்குழு. அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இவர்களை தவிர லட்சுமிமேனன் கங்கனா ரனவத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வெற்றிகரமாக வரும் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கும் நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரமுகி 2வின் க்ளிம்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வந்துவிட்டாள் சந்திரமுகி என பதிவிட்டு வருகின்றனர். ட்ரைலர், வீடியோ என அனைத்தையும் பார்க்கும் போது சந்திரமுகி, வேட்டையனின் ப்ளாஸ்பேக் சந்திரமுகி 1-ல் கதையாகவே சொல்லப்படும். ஆனால் சந்திரமுகி 2-வில் அது முழுமையாக காண்பிக்கப்படும் என தெரிகிறது.

இந்த படத்திற்கு U\A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் அனைவரும் குடும்பத்துடன் படத்தை பார்த்து என்ஜாய் பண்ண தயாராக இருங்கள் என லைகா புரோடக்‌ஷன்ஸ் பதிவிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com