சந்திரமுகி -2 விமர்சனம்!

மீண்டும் வேட்டையன் ராஜா பராக்.. 
Chandramukhi2
Chandramukhi2 Intel

ல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் P. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடித்து சந்திரமுகி -2 படம் வெளியாகி உள்ளது.

படத்தின் கதை முதல் பாகத்தில் பார்த்த கதைதான். முருகேசன் (வடிவேலு) தன் பங்களாவை விற்க நினைக்கிறார்.வாங்க நினைக்கும் குடும்பத்தை வீட்டில் தங்க வைக்கிறார். வழக்கம் போல ஒரு ஆவி பயமுறுத்துகிறது இது சந்திரமுகி ஆவி, வேட்டையன் ராஜாவை பழி வாங்க நினைக்கிறது. ஹீரோ ராகவா லாரன்ஸ் குடும்பத்தை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைக்கிறார்.குலதெய்வம், செங்கோட்டையன் என்ற இரண்டு புதிய விஷயங்களையும் சேர்த்து சொல்லியிருக்கிறார் வாசு. 

சந்திரமுகி முதல் பாகத்தில் இருந்த பயமுறுத்தல்,பரபரப்பு இந்த இரண்டாம் பாக்கத்தில் மிஸ்ஸிங். பல காட்சிகள் முதல் பாக்கத்தை ஒத்து இருப்பதால் படம் பார்க்கும் போது பயம் வர மறுக்கிறது. படத்தில் மிகப்பெரிய ஆறுதல் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள்தான்.  பல காட்சிகளில் வடிவேலு  பிரமாத படுத்திவிட்டார் என்றே சொல்லலாம் லாரன்ஸ் உடன் சேர்ந்து செய்யும் காமெடியில் மீண்டும்  காமெடியில் கம் பேக்   வடிவேலு என சொல்ல வைக்கிறார்.

ராகவா லாரன்ஸ்  பல காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். சில காட்சிகளில் ரஜினியை இமிடேட் செய்கிறார்.  பல பெண் கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும லக்ஷ்மி மேனன் மட்டுமே நாம் எதிர்பார்க்காத ஒரு கேரக்டரில் நடித்து நம்மை ஆச்சரியப் படுத்துகிறார். கங்கனா காதல் சந்திரமுகியாக நன்றாக நடிக்கிறார்.ஆக்ரோஷ சந்திரமுகியாக மாற்றம் அடையும் போது நம்மை ஈர்க்காமல் போகிறார்.

கீரவாணி படத்தில் வரும் தெலுங்கு பாடல்களுக்கு மட்டுமே நன்றாக இசையமைத்துள்ளார். தோட்டா தரணியின் கலை வடிவத்தில் அரண்மனை பிராம்மாண்டமாக இருக்கிறது. இரண்டாம் பாகம் சந்திரமுகி  எடுப்பதாக சொல்லி முதல் பாக சந்திரமுகி  கதையை பெரிய மாற்றங்கள் இல்லாமல் அப்படியே தந்துள்ளார்  P வாசு. இந்த இரண்டாம் பாகத்தை பொறுத்தவரை மீண்டும் வேட்டையன் ராஜா பராக் என்றுதான் சொல்ல முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com