"சின்ன சிம்ரன்" பிரியா பவானி சங்கர் - எஸ்.ஜே.சூர்யா!

"சின்ன சிம்ரன்" பிரியா பவானி சங்கர் - எஸ்.ஜே.சூர்யா!

ஒரு படத்தில் ஹீரோ - ஹீரோயின் Chemistry வெற்றி பெற்றால்  அந்த ஜோடிக்கு சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும். சில சமயம் ஜோடிகள் மீடியாக்களில் கிசுகிசுக்கப்படுவார்கள். இதை தாண்டி ஹீரோ ஒருவர் தன்னுடன் நடிக்கும் ஹீரோயினை தன் உறவுக்கார பெண்ணுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். ராதா மோகன் இயக்கத்தில் S. J. சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் படம் பொம்மை.

இந்த பொம்மை படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு நிகழ்வில் தான் படத்தின் ஹீரோ S. J. சூர்யா ஹீரோயின் பிரியா பவானி சங்கரை தனது அக்காவின் மகளுடன் ஒப்பிட்டு பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.இதை சூர்யா சொல்லியே கேட்போம் "பொம்மை படத்தில் அழகான ஒரு பொம்மையாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். வெளி நாடுக்களில் பொம்மையை திருமணம் செய்து வாழ்பவர்களை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ராதா மோகன் பல உணர்வுகளை சொல்லும் படம் எடுத்துள்ளார். இந்த உளவியல்களின் உணர்வாக வந்துள்ளது.நான் ஒரு ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து டைரக்டர் ஆகி தயாரிப்பாளர் ஆனேன்.நஷ்டங்களை சந்தித்தேன். வில்லன், ஹீரோ என்று எழுந்து வந்தேன். மீண்டும் படம் தயாரிக்க வந்துள்ளேன் ஆசை யாரை விட்டது.நானும், பிரியா பவானி சங்கரும் இணைந்து நடித்த மான்ஸ்டர் படம் வெற்றி பெற்றதற்கு பிறகு பொம்மை படத்தில் ஜோடி சேர்ந்துள்ளோம்.நியூ படத்தில் நானும் சிம்ரனும் இருக்கும் போஸ்டரை போலவே இந்த பொம்மை படத்தில் நானும் பிரியா பவானி சங்கரும் இருக்கிறோம்.பிரியா பவானி சங்கர் பார்ப்பதற்கும், நடிப்பிலும் சிம்ரனை போல இருக்கிறார். மேலும் என் அக்கா மகள் ஒருவரை போல இருக்கிறார் பிரியா பவானி சங்கர்"என்றார்."என் மற்ற படங்களை போல்  இந்த படமும் உங்களை ஏமாற்றாது.S. J. சூர்யா படத்திற்கு கூடுதல் பலம்" என்கிறார் ராதா மோகன்."ஒரு பொம்மையாக நடிப்பது வித்தியாசமான அனுபவம். எத்தனை டேக் எடுத்தாலும் தனக்கு திருப்தி ஏற்படும் வரையில் நடித்து கொடுப்பார் சூர்யா சார் "என்று புகழாரம் சூற்றுகிறார் 'சின்ன சிம்ரன் 'பிரியா பவானி சங்கர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com