சியான் 62 - விக்ரமுடன் இணையும் சூரஜ் வெஞ்சரமூடு!

Suraj Venjaramoodu
Suraj Venjaramoodu
Published on

நல்ல சினிமாகளையும், சிறந்த சினிமா படைப்பாளிகளையும் தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் கொண்டாடி வருகிறார்கள்.குறிப்பாக மலையாள மொழி படங்களுக்கு இங்கே பெரிய வரவேற்பு இருக்கிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான செம்மீன் முதல் நேற்று வெளியான மஞ்சுமால் பாய்ஸ் வரை பல உதாரணங்கள் இருக்கின்றன.

 நம் தமிழ் நாட்டில் மலையாள படங்கள் போலவே, மலையாள திரை உலகிலிருந்து வரும் நடிகர்களுக்கும் அவர்களின் நடிப்பாற்றலுக்கும் வரவேற்பு உள்ளது.

 "நீ பழைய பன்னீர் செல்வமா வரணும்"என்று சத்ரியன் படத்தில் வயதான வில்லனாக மிரட்டிய மறைந்த நடிகர் திலகனை நம்மால் மறக்க முடியுமா?

1990 களில் சூரியன் படத்தில் கொடூர வில்லனாகவும், லவ் டுடே படத்தில் சைக்கோ கணவனாகவும் நடித்த மறைந்த ராஜன் P. தேவ்வின் நடிப்பு இன்றும் ரசிக்கப்படுகிறது.

'விக்ரம் வேதா' படத்தில் சேட்டாவாக நடித்த ஹரிஷ் பேரடி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகிவிட்டார். 'சேட்டா' என்று அன்போடு தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் நடித்து, சென்ற ஆண்டு தமிழில் வெளியான 'பம்பர்' படம் தற்சமயம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்று வருகிறது.

'விக்ரம்' படத்திற்கு பிறகு பகத் பாசில் தமிழ்ப் படங்களில் பிஸியான நடிகராகி விட்டார்.

Suraj Venjaramoodu
Suraj Venjaramoodu
இதையும் படியுங்கள்:
பெண்களின் திறமையை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் - 'சிங்கப்பெண்ணே'!
Suraj Venjaramoodu

இப்போது மலையாள சினிமாவிலிருந்து சூரஜ் வெஞ்சரமூடு தமிழில் நடிக்க வருகிறார். விக்ரம் நடிக்கும் 62 வது படத்தில் சூரஜ் நடிக்க உள்ளார்.இப்படத்தை 'சித்தா' படத்தை இயக்கிய அருண் குமார் இயக்குகிறார். தற்காலிகமாக இப்படத்திற்கு சியான் 62 என்று பெயர் வைத்துள்ளார்கள். மலையாளத்தில் நகைச்சுவை நடிகராக பல படங்கள் நடித்து தற்போது குணசித்ர வேடத்திலும் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் சூரஜ். மலையாள படத்தை ரசிக்கும் தமிழ் ரசிகர்கள் பலர் இவர் எப்போது தமிழில் என்ட்ரி தருவார் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். சியான் 62 படம் மூலம் இந்த எதிர் பார்ப்பு பூர்த்தியாகி உள்ளது.

சூரஜ் மலையாளத்தில் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'பெரியாத்தவர் ' என்ற படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். அடிப்படையில் மிமிக்ரி கலைஞரான சூரஜ், திருவனந்தபுர வட்டார மலையாள மொழியை மிகச் சிறப்பாக பேசுவதில் வல்லவர். நல்ல கலைஞர்களை வரவேற்கும் தமிழ் நாடு, சிறந்த நடிகரான சூரஜ் வெஞ்சரமூடுவையும் வரவேற்கும் என்பது நிச்சயம்! வெல்கம் டு கோலிவுட் 'சேட்டா'.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com