தியேட்டரில் சினிமா திருவிழா: இந்த வாரத்தில் மட்டும் மொத்தம் 12 திரைப்படங்கள் ரிலீஸ்..!

movie release
movie release
Published on

ஜனநாயகன் பட ரிலீஸ் தள்ளிப்போனாலும் போனது.மூலை முடுக்கு,பரண்களில் தூங்கிக்கொண்டிருந்த பல படங்கள் தூசி தட்டப்பட்டு ரிலீஸ் ஆகிக்கொண்டு இருக்கிறது.போன வாரம் போலவே இந்த வாரமும் ஒரு டஜன் படங்கள்.எட்டு  புதுப்படங்கள் + 4 ரீ ரிலீஸ் படங்கள்.

1. மை லார்ட்(My Lord)-13/2/2026

குக்கூ(2014),ஜோக்கர்(2016),ஜிப்சி(2020),ஜப்பான்(2023) ஆகிய படங்க்ளை இயக்கிய ராஜூமுருகன் மெஹந்தி சர்க்கஸ்(2019)வர்மா(2020) ஆகிய படஙகளில் திரைக்கதை ,வசனம் எழுதி இருக்கிறார்.அவை போக மாடர்ன் லவ் சென்னை (2023) என்ற வெப் சீரிசில்  லாலாகுண்டா பொம்மைகள்  என்ற ஒரு எபிசோடு கதையை இயக்கி இருக்கிறார்.ராஜூ முருகனின் படைப்புகளில் கார்த்தி நடித்த ஜப்பான் மட்டும் தோல்விப்படம்.மற்றவை அனைத்தும்  தரமான  படஙகளே.

இயக்குநர் எம் சசிக்குமார் நாயகன் ஆகவும் ,சைத் ரா ஜே அசார் நாயகி ஆகவும்  குருசோமசுந்தரம்,ஆஷா சரத்(திரிஷ்யம்,பாபநாசம் புகழ்) ஆகியோர் முக்கியக்கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். பொதுவாக கோர்ட்டில் தான் மை லார்டு என்ற பதம் பிரயோகிக்கப்படும்.ஆனால் இந்த படம் கோர்ட் ரூம் ட்ராமா அல்ல.குடும்பப்படம்.

2.  பூக்கி 13/2/2026

விஜய் ஆண்ட்டனி தயாரிக்கும் படம் இது.தெலுங்கு,தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவாகிய படம்.சத்ய தேவ்,லட்சுமி மஞ்சு, ஆகியோர் பட விழாவில் கலந்து கொண்டனர்..

இது ஒரு ரொமாண்டிக் காமெடி மூவி.அஜய் திஷன் ,தனுசா இருவரும் நாயகன்,நாயகி ஆக நடிக்க சுனில் முக்கியக்கேரக்டரில் நடிக்கிறார்.

மேலும் ஆர் பாண்டியராஜன்,இந்துமதி மணிகண்டன்,விவேக் பிரசன்னா,பிளாக் பாண்டி ,ஆதித்யா கதிர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

3 சீதா பயணம் (14/2/26)

ஆக்சன் கிங் அர்ஜூன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் இது.

அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகி ஆக நடிக்க ,சத்யராஜ்,பிரகாஷ ராஜ்,கோவை சரளா ,நிரஞசன் ஆகியோர் முக்கியக்கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.ஆக்சன் கிங் அர்ஜூனும்,அவரது மாப்பிள்ளை துருவா சர்ஜா கெஸ்ட் ரோலில் வருகிறார்கள்.

ஒரு நீண்ட பயணத்தில் நாயகி ஒரு அறிமுகம் இல்லாத நபருக்கு லிப்ட் தருகிறாள்.எந்த போன் கால் வந்தாலும் ஸ்பீக்கர் போனில் போட வேண்டும் என்ற கண்டிஷனுடன் தான் லிப்ட் தருகிறாள்.இதற்குப்பின் நிகழும் திருப்பஙகள் தான் மீதித்திரைக்கதை.

இது ஒரு ரொமாண்டிக் திரில்லர் மூவி

ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டிருக்கிறது

4. மைலாஞ்சி -

ஸ்ரீராம் கார்த்திக் நாயகன் ஆக நடித்து இயக்கி இருக்கும் படம்.இது ஒரு ரொமாண்டிக் திரில்லர் மூவி.சிங்கம்புலி,முனீஷ் காந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில்  நாயகி ஆக கிரிஷா க்ரூப் நடித்திருக்கிறார்.

நாயகி ஒரு அனாதை.வலுக்கட்டாயமாக நடக்கும் திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை.ஆனால் நடந்து விட்டது.வேறு யாரையாவது காதலிக்க நினைத்திருக்கும் நேரத்தில் நாயகன் அங்கே வருகிறான்.

நாயகன் ஒரு போட்டோகிராபர்.வித்தியாசமான போட்டோ சூட்டுக்காக ஊட்டி வருகிறான். நாயகன்,நாயகி சந்திப்பு நடக்கிறது.இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை

5 கா -தி பாரஸ்ட்

ஆண்ட் ரியா ஆக்சன் ஹீரோயினாக நடித்த படம் இது.சலீம் கவுஸ், நாயகன் ஆக வருகிறார்.2018 ல் ஆரம்பித்த படம் சில பிரச்சனைகளால் நின்று போய் ,பின்னர் 2024 ல் படப்பிடிப்பு முடிந்தது.சில பொருகாதாரப்பிரச்சனைகளால் இப்போது தான் ரிலீஸ் ஆகிறது

ஜி மாரிமுத்து ,அக்சிதா,நவீன் ,அர்ஜூன் சிங்க் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இயக்கம் நாஞ்சில்.டைட்டிலுக்கான விளக்கம் காடு அல்லது கானகம் என்பதன் சுருக் சொல் தான் கா

6. Couple Friendly. கப்பிள் பிரண்ட்லி

அஸ்வின் சந்திரசேகர் கதை ,திரைக்கதை எழுதி இயக்க சந்தோஷ் சோபன்,மானசா வாரனாசி ,யோகி பாபு ,லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடிக்கும் படம்.

இண்ட்டீரியர் டெக்ரேசன் டிசைனர் ஆக சென்னையில் வாழும் நாயகன்  நாயகியை சந்தித்ததும் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றஙகள் தான் கதை.

7 Funky பங்க்கி

கயாடு லோஹர் நாயகி ஆக நடிக்க  விடிவி கணேஷ், விகே நரேஷ் மற்றும் பலர் நடிக்கும் இந்தப்படத்தை கே வி அனுதீப் இயக்கி இருக்கிறார்.இது ஒரு தெலுங்குப்படம்.தமிழ் டப்பிங்கில் வெளியாகிறது

8. தெரிஞ்சா காதலிங்க

இது ஒரு காதல் கதை.இயக்கம்.கஜேந்திரன்.கிராமத்தில் நடக்கும் இந்தக்காதல் கதையில் 60 நொடிகளில் அறிமுகமானவள் நீ தானே என்ற பாடல் ஹிட் ஆகி இருக்கிறது.சி எம் மகேந்திரா தான் இசை.கிரண்,நந்தினி ஆகிய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.இது ஒரு லோ பட்ஜெட் மூவி 

9  மவுனம் பேசியதே

பருத்தி வீரன் புகழ் அமீர் இயக்கத்தில் சூர்யா,திரிசா,நந்தா,நேஹா  மற்றும் பலர் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் ரீ ரிலீஸ் ஆகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஆடாத ஆட்டமெல்லாம்,என் அன்பே என் அன்பே உட்பட எட்டு சூப்பர்ஹிட் பாடல்கள் கொண்ட படம்.இதன் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பரபரப்பாகப்பேசப்பட்டது

10. மின்னலே

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் முதல் படம்.மாதவன்,ரீமாசென் ,அப்பாஸ் மற்றும் பலர் நடிக்க 2001 ல் ரிலீஸ் ஆன இந்தப்படம் ரீ ரிலீஸ் ஆகிறது.

ஹாரீஷ் ஜெயராஜ் இசையில் அனைத்துப்பாடல்களும் ஹிட்.குறிப்பாக தாமரை எழுதிய வசீகரா உன் நெஞ்சினிலே பாட்டு ஒரு ஆண்மகனை வர்ணிக்கும் பாட்டு பரவலாகப்பேசப்பட்டது

11 காதலர் தினம்

இயக்குநர் கதிர் இயக்கத்தில் குணால் ,சோனாலி பிந்த் ரே நடித்த  பிரம்மாண்டமான வெற்றிப்படம்.1999ல் ரிலீஸ் ஆன படம் .

என்ன விலை அழகே

காதல் எனும் தேர்வெழுதி

ஓ மரியா

ரோஜா ரோஜா 

நினைச்சது நினைச்சபடி

பாண்டியா ஆட்டமுமாட

என அனைத்துப்பாடல்களும் மெகா ஹிட் ஆனது.

இதில் கவுண்டமணி காலேஜ் புரபசராக காமெடியில் கலக்கி இருப்பார்

12. உயிர் உள்ளவரை உஷா

1983 ல் ரிலீஸ் ஆகி பிரம்மாண்டமான வெற்றின்பெற்ற படம் இது.புதுமுகம் கங்கா,நளினி ,சரிதா மற்றும் பலர் நடிக்க டி ஆர் செயின் ஜெயபால் ஆக வருவார்.

இதில் அவர் பேசி சண்டை  போடும்

 வாடா என் மச்சி 

வாழக்கா பஜ்ஜி உன் உடம்பைப்பிச்சி 

போட்டுடுவேன். பஜ்ஜி .

டயலாக் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்.ஆர்க்கெஸ்ட்ராக்களில் பேசிக்காட்டு வார்கள்.

அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே

மோகம் வந்து தாகம் வந்து என்னை அணைக்க

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி

 வைகைக்கரைக்காற்றே நில்லு

இதயமதைக்கோவில் என்பேன்

கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜூக்கு

என எல்லாப்பாட்டுக்களும் தேன் சொட்டு.

இந்தி,தெலுங்கு,கன்னடம் என ரீமேக் செய்யப்பட்டது

இதில் நாயகன் ஆக நடித்த புதுமுகம் கங்கா 2 வருடங்கள் முன் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் என்பது வருத்தமான செய்தி..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com