சினிமா என்றால் உயிர்!

மும்பை பர பர
சினிமா என்றால் உயிர்!

’சினிமா என்றால் எனக்கு உயிர்’ என்று முன்னணி ஹீரோயின் ஒருவர் கூறியிருக்கிறார். யார் அவர்? சமீபத்தில் அவர் அளித்த பேட்டி:-

”பண்டிகை நாட்களில் பிறருக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டுமென எனது சிறுவயதிலிருந்தே, என் தாயார், டாக்டர் மோனா சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கும் நல்லது நடக்குமென அடிக்கடி கூறுவர்.

நான் ஹீரோயினாக ஆன பிறகு இதுவரை 21 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றேன். ஆதரவற்ற அவர்களுக்கு உதவுவதை எண்ணிப் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும், உள்ளது. பிரதி பலன் எதிர்பாராது மற்றவர்களுக்கு நாம் உதவி செய்வது, பின்னர் நமக்கும், நமது சந்ததியினருக்கும் நன்மை செய்யும். தேவைகளுக்குப் போதுமான பணமிருந்தால் போதும். மீதியை நல்ல செயல்களுக்குச் செலவிடுதல் வேண்டும்.

பொங்கல் பண்டிகை சமயம், தத்தெடுத்த 21 குழந்தைகளுக்குப் புத்தாடைகள் வழங்குகையில், அவர்கள் அடைந்த சந்தோஷத்தை வெறும் வார்த்தைகளால் கூற இயலாது.

கடவுளின் ஆசியும், ஆதரவுமே எனது வாழ்க்கையை நல்லபடியாக செலுத்திக்கொண்டு இருக்கிறது.

திருமணமான பிறகு நடிப்பிற்கு சில வாரங்கள் ஓய்வு கொடுக்கையில், சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டதாக வதந்திகள் பரவின. அது உண்மையல்ல.

“எனக்கு சினிமா என்றால் உயிர்” எப்போதும் மறக்க மாட்டேன். சமீபத்தில் ஒரு விளம்பரப்பட ஷீட்டிங்கில் பங்கேற்று நடித்தேன். தமிழில் ஆர். கண்ணன் இயக்கும் ‘காந்தாரி’ எனும் படத்தில் முதன் முறையாக மாறுபட்ட இரட்டை வேடங்களில்  நடிக்கிறேன். மேலும், தமிழ், தெலுங்கு மற்றும் சில வெப் தொடர்களில் பிசியாக நடித்து வருகிறேன்.” இவ்வாறு மகிழ்வுடன் கூறியவர், தனது காதலரும் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரியாவை சென்ற மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஹன்சிகா மோத்வானி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com